Monday 20 February 2012

As a Special Case


சனிக்கிழமை காலை. இடம் 100அடி சாலையில் உள்ள வடபழனி கிளை ஹச்.டி.எப்.சி. வங்கி.

“As a special case” இந்த வார்த்தைகள் என் மனதில் பதிந்துவிட்டது. எத்தனை customer care அலுவலர் கடைசி வாய்ப்பாக நமது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் முன் உதிர்க்கும் அற்புத வார்த்தைகள். இதை ஹச்.டி.எப்.சி. பெண் அலுவலர் அந்த நபரிடம் சொல்லும்போது அவர்களின் உரையாடலை நிறைய கவனித்து என்னவென்று ஊகித்திருந்தேன்.

அந்த நபர் சுமார் 10,00,000 ரூபாய் பணத்தை வைப்புத் தொகையாக செலுத்தியிருக்கிறார் அந்த வங்கியில். காலாண்டு முடிந்து அவரது வைப்புத் தொகையின் வட்டியை அவரது கணக்கில் சேர்ப்பதற்கு முன் அவரை கலந்தாலோசிக்காமலேயே வருமான வரிக்காக ஒரு தொகையை எடுத்துக் கொண்டுள்ளார்கள் வங்கியில். இதற்கான விளக்கம் கேட்டும் அந்த தொகை தனக்கு மீண்டும் வேண்டும் என்றும் அந்த வாடிக்கையாளர் வாதிட்டுக்கொண்டிருந்தார். அந்த பெண்னை பார்த்தால் சற்று பாவமாகத்தான் இருந்தது. ஆனால் நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை எனக்கு தெரியாமல் எப்படி நீங்கள் எடுத்தீர்கள் என்று அந்த வாடிக்கையாள்ர் கேட்கும்போது அவர் பக்க நியாயம்தான் நிற்கிறது. மேலும் அவர் கூறுகைஇல் வேறு எந்த வங்கியிலும் அவருக்கு இதை போல காலாண்டுக்கு வ்ருமான வரியாக குறைக்கவில்லை என்றும் வாதிட்டார். குறைந்த பட்சம் இப்படி ஒரு புதிய பாலிசி ஹச்.டி.எப்.சி வங்கியில் வந்த பின் அதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் அல்லவா. இதற்கு அந்த அலுவலரின் மௌனம் அவர்கள் அதை செய்யவில்ல என்ற அதிர்ர்சியான உண்மையை எனக்கு சொல்லியது. மற்ற வாடிக்கையாளர்கள் இதை கவனிக்க ஆரம்பித்தார்கள். அந்த வாடிக்கையாளரும் முடிவு தெரியாமல் எழுந்திருக்கப் போவதில்லை என்பதி பிடிவாதமாக் இருந்தார். யாராவது ஒரு மேலதிகாரியை உடனடியாக தான் சந்திக வேண்டும் என கூறி அமர்ந்துவிட்டார் அவர்.

அவர் கேட்ட ஒரு நச் கேள்வி அந்த பெண்ணை குழப்பி அசைத்தும் பார்த்தது. எனது வைப்பு நிதியில் ஒரு வருடம் முடிவில் இத்தனை ரூபாய் வட்டி வரும் என்பதை கணக்கிட்டு நீங்கள் வருமான வரியாக எனது வட்டியில் எடுத்தும் கொண்டீர்கள். சரி. நான் இந்த நிமிடம் எனது வைப்பு நிதியை கேன்சல் செய்கிறேன் என்றால் எனக்கு வருமானமாக வந்த வட்டியானது வருமான வரிக்கு உட்படாது. அப்படியானால் எனது முழு வட்டியையும் எந்த பிடித்தமும் இல்லாமல் நீங்கள் எனக்கு தர வேண்டும் என்று சொன்னார் பாருங்கள் அந்த பெண்ணுக்கு ஏதோ புரிந்த்து. வைப்பு நிதியை கென்சல் செய்கிறேன் என்றவுடன் உடனடியாக அதற்குரிய பார்மை வீம்பில் எடுத்து அவரிடம் நீட்டிவிட்டாள் அந்த பெண். அதன் பிறகு இந்த விளக்கத்தை அந்த வாடிக்கையாளர் கேட்டார். தனது மொபைலை எடுத்துக்கொண்டு அடுத்த cubicle க்கு போய் யாரோடோ ஒரு 10 நிமிடம் பேசிவிட்டு வந்து சொன்ன வார்த்தைதான் “As a Special case we will do it for you sir”.  அதற்குள் நான் வந்த வேலை முடிந்த்தால் அந்த வாடிக்கையாளர் ஏதோ கடிதம் எழுத ஆரம்பிப்பதை பார்த்துக் கொண்டே நான் வெளியேறினேன்.

என்னுள் எழுந்த கேள்விகள் வருமானத் வரித் துறைக்கு அந்த வாடிக்கையாலர் சார்பாக செலுத்தப்பட்ட்தாக சொல்லப்பட அந்த பணம் எப்படி வங்கியால் திருமப் பெற முடியும். அப்படியானால் அவர்கள் அந்த பணத்தை பிடித்தம் செய்த்தோடு இருக்கிறது. வருமான வரித் துறைக்கு கட்டியிருக்க வாய்ப்பில்லை. அப்படியென்றால் மற்றவர்களிடம் பிடித்தம் செய்யப்படும் காலாண்டு TDS பணமானது வங்கியிடமேதான் இருக்குமா. அந்த பணத்தை அவர்கள் என்னவேண்டுமானால் செய்யலாம். நமது உரிமைகளை எத்தனை பேர் இத்தனை உறுதியாக கேட்டு பெறுகிறோம். வாடிக்கையாளர்களாகிய நம்மை எப்படி இவர்கள் இத்தனை எளிதாக ஏமாற்ற முடிகிறது.

யாராவது HDFC , அல்லது மற்றைய வங்கியை சேர்ந்தவர்கள் என்ன தவறு நடந்திருக்கும் என் ஊகிக் முடிந்தால் பின்னூட்டத்தில் கூறவும்.

5 comments:

  1. கடந்த வருடம் முதல் இந்த சட்டம் ஆரம்பித தது எனலாம் ! வட்டி தொகை ரூபாய் ஐந்து ஆயிரம் (சரியாக நியாபகம் இல்லை )மேல் போகும் போது வங்கிக்கு பிடிக்க சொல்லி உத்தரவு என கூறினார்கள் .அதை கட்டவில்லை என்றால் நாம் அந்த வட்டி பணத்திற்கு நாம் IT ல கணக்கு காண்பிக்க வேண்டும் (பெரும்பாலானோர் இதை IT க்கு கணக்கு காண்பிக்காமல் இருப்பதால் வங்கி ஐ வருமான வரி பிடிக்க சொல்லி உத்தரவு என்றனர் )
    இந்த வட்டி வருமானத்தை கான் பிக்காவிட்டால் RISK நம்மை சேர்ந்ததாகும்
    பி கு நான் வங்கியில் வேலை செயவில்லை

    ReplyDelete
  2. @தல,

    தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  3. * Bank should get 15G/15H form at the time of the customer depositing with the proper explaination.
    * TDS will be deducted every month for the interest exceeding 10,000/- per annum.
    * Bank should explain TDS and pre closure norms at the time of depositing to every customers.
    * "On a special Case" it is not applicable for TDS reversal, TDS is remitted to IT dept every month before 7th.

    ReplyDelete
  4. @ப்ரகாஷ்,

    15G பார்ம் கொடுக்க வந்த போதுதான் அது அந்த வாடிக்கையாளருக்கு தெரிய வந்ததாம்... On a Spacial case என்று அந்த அலுவலர் சொன்னதுதான் எனக்கு பல சந்தேகங்களை எழுப்பியது.. என்ன நடந்ததோ தொரியவில்லை இறுதியில்... :)

    ReplyDelete
  5. புலனாய்விலும் தடம் பதித்தாயிற்றா.. :))

    ReplyDelete