Tuesday 17 July 2012

மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் தனியார் மருத்துவமனைகளும்

மருத்துவ சிகிச்சை பற்றி பேருந்தில் நடந்த சுவாரஸ்யம்

பெசண்ட் நகர் டூ வடபழனி பேருந்து மதியம்

என் பின் சீட்டில் இருந்த ஒருவர் அவரது நண்பரிடம் தான் சமீபத்தில் எடுத்துக் கொண்ட சிகிச்சையை பற்று விளக்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர் குறிப்பிட்ட ஒரு விஷயம் என்னை துணுக்குற செய்தது.

அவர் சென்னையில் ஒரு பிரபல மருத்துவமணை பெயரை சொல்லி - அந்த மருத்துவமனைக்காரங்க நல்லவங்க என்று சொல்லிக்கொண்டிருந்தார். இவர் அங்கு ஏதோ அறுவை சிகிச்சைக்கு சென்றாராம். 55,000ரூ ஆகும் என்றார்களாம். அவரும் அரசாங்கத்தின் கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை எடுக்க சம்மதித்துள்ளார்கள். அப்போது அந்த மருத்துவமனையில் உங்களுக்கு பணம் ஏதாவது வேண்டுமா என்று கேட்டார்களாம். இவரும் ஆம் என்றாரார். அவர்கள் சரி அறுவை சிகிச்சைக்கு 1,00,000 ரூ என பில்லிங் செய்து, அதில் சிகிச்சைக்கு போக மீது 80,000ரூவை இவருக்கு கொடுத்தார்களாம். இவருக்கு ரொம்ப சந்தோஷமாம். 55,000ரூவிற்கு செய்யப்படும் சிகிச்சைக்கு அந்த மருத்துவமனயும் அரசிடமிருந்து 80,000ரூவை கொள்ளை லாபமாக பெற்றுக்கொண்டது இதன் மூலம் வெளிச்சமாகிறது.

இதெல்லாம் எங்கு போய் முடியப் போகிறதோ. இதி அந்த நபர் சொன்னது இன்னமும் விசேஷம். நாம சரியா பேஸி நமக்கு என்ன வேணுங்கிறதை விளக்கி சொன்னா அதுக்கு ஏற்ற மாதிரி செய்து கொடுப்பாங்கன்னு நியாயப் படுத்துகிறார். அவரே இப்போ ஜெ.ஜெ வந்த பின் இந்த தொகை 4,00,000ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருப்பதை சொல்லி அடுத்து ஏதோ சிடிச்சை எடுத்துக் கொள்ளப்போவதாய் கூறினார். தன்னுடன் இருந்த நபரையும் அதற்கு தயார் செய்து கொண்டிருந்தார்.

இங்கே சந்தில் இருக்கும் பத்திரிக்கை நண்பர்கள் இதைப் பற்றி விசாரித்து இப்படி அரசாங்கத்தின் பணம் கொள்ளை போவதை தடுக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்க முடியுங்களா.