நண்பர் ஒருவர்
சமீபத்தில் இந்த படம் பார்க்கச் சொல்லி ரெகமண்ட் செய்திருந்தார். யூடியூப் லிங்க்
ஆங்கில சப்டைட்டிலுடன் எளிதாக கிடைத்த்து. (http://www.youtube.com/watch?v=9mfUspqIa8c ) இனி படத்தை பற்றி சில வரிகள்.
கதை என்று பார்த்தால்
இது ஒரு முக்கோண இல்லையில்லை நாற்கோண இல்லை ஐங்கோண காதல் கதை. ஹீரோ ஹீரோயினை(வில்லி)
காதலிக்கிறார். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கையில் அவள் அவரை விட்டு
போய்விடுகிறார். ஹீரோ அதற்கு பின் சந்திக்கும் வேறு ஒரு பெண்ணை திருமணம்
செய்துகொள்கிறார். இதுவரை இது ஒரு சாதாரண முக்கோண காதல் கதை. அவரை விட்டு பிரிந்து
போகும் ஹீரோயின் வேறு ஒரு நபரை சந்தித்து அவரை காதலிக்கத் துவங்குகிறார். இந்த
புது நபர் ஒரு கேங்க்ஸ்டர். ஹீரோயினுக்கு பிடிக்கவில்லையென தன் தொழிலையே
மாற்றிக்கொள்கிறார். இப்போது இது நாற்கோண காதல் கதையாகிறது. இதுகூட பார்த்திருக்கிறோம்.
ஹீரோ தன்னை விட்டுப் போன ஹீரோயினை கண்டுபிடிக்க தன் பள்ளி நண்பனான ஒரு துப்பறியும்
நிபுன்ரின் உதவியை நாடுகிறார். இந்த நண்பனும் நம் ஹீரோயினின் அழகில் மயங்கி அவளை
காதலிக்கிறார். இந்த இட்த்தில் இது ஐங்கோண காதல் கதையாகிறது. இதுதான் பட்த்தின்
கதை.
இதில் என்ன
ஸ்பெஷாலிட்டி இருக்கு என கேட்பவர்களுக்கு. இந்த பட்த்தில் காதல், காமெடி, ஆக்ஷன்,
செண்டிமெண்ட், நட்பு என எல்லாமே இருக்கிறது. இதை எல்லாத்தையும் விட கதையும்
திரைக்கதையும்தான் பட்த்தின் ஸ்பெஷாலிட்டி. இந்த படம் ஆரம்பம் எப்படின்னா ஹீரோ
அவர் நண்பனிடம் ஹீரோயினை பற்றி கேட்டுகிட்டே கார் ஓட்டிகிட்டு வருவார். அப்போ
எங்கிருந்தோ வந்த பந்து காரின் முன் விழ அதிர்ச்சியில் கார் நிலை தடுமாற எதிரில்
வரும் பேருந்து மோதாம இருக்க சடன் ப்ரேக் அடிக்க அதனுள் இருக்கும் ஒரு பெண்
தடுமாறி கீழே விழ அவள் மேல் அருகில் இருந்த ஆணும் விழ அவர்களுக்குள் காதல் பிறக்க
அவர்களின் கல்யாண பேட்டியில் படம் ஆரம்பிக்கிறது.
படம் கதை சொல்லி
வகையை சேர்ந்தது. ஹீரோ, ஹீரோவின் நண்பர், ஹீரொயின், ஹீரோவின் காதலி, ஹீரோயினின்
காதலன் என இவர்கள் ஐவரின் பார்வையில் சம்பவங்கள் நகர்கின்றன. இதிலும் ஒரு
ஸ்பெஷாலிட்டி. ஒரே சம்பவம் ஒவ்வொருவரும் எதை எப்படி உணர்கிறார்கள் என்பதுதான்
அருமை. உதாரணத்திற்கு ஹீரோவை போனில் அழைட்க்கும் அவரது துப்பறியும் நண்பன் அவரை
ஹோட்டலுக்கு வர சொல்லுவார். ஹோட்டலுக்கு வந்து ஒரு மணி நேரம் கழித்தே வருவார்.
இந்த காட்சியை ஹீரோவின் நண்பர் விவரிக்கும் போதுதான் ஏன் அப்படி நடந்த்து என்ற
உண்மை தெரியும். ஹீரோவின் வீட்டிற்குள் திருட்டுத்தனமாய் வரும் அவரது நண்பன் அந்த
நேரத்தில் வீட்டிற்குள் வரும் ஹீரோவை திசை திருப்பி தப்பிக்கவே அப்படி செய்தார்
என்பது அவரது நண்பர் விவரிக்கையில்தான் புரிகிறது. இப்படியாகத்தான் காட்சிகள்
நகர்கின்றன படம் முழுதும் சுவாரஸ்யமாக.
ஹீரோ ஹீரோயின்
சம்பந்தப்பட்ட மூன்று காதல்கள் மற்றும் ஒரு ஒருதலைக்காதலை தவிர இந்த படத்தில் வேறு
மூன்று காதல்களும் இருக்கின்றன. ஆக இவர்கள் அனைவரும் ஒரே இட்த்தில்
இருக்கிறார்கள். அந்த இட்த்திலிருந்துதான் படம் ஆரம்பிக்கிறது. அவர்கள் அனைவரும்
அங்கிருந்தார்கள் என்பது படம் சுமார் மூன்றில் இரண்டு பங்கு முடிந்த பின்னர்தான்
நமக்கு புரிகிறது. திரைக்கதைக்காக வாய்விட்டு சபாஷ் போட வைக்கும் இடம் இது. அந்த
மூன்று ஜோடிகளும் அவர்களின் திருமண பேட்டியின் போது அவர்களின் நினைவுகளை
தனித்தனியாய் பகிர்வதும் இறுதியில் அவை அனைத்தும் படம் ஆரம்பிக்கும் இடம் என்பதும்
அந்த நொடிவரை தெரியாமல் நகர்த்தி வந்து அந்த இட்த்தில் புரியவைத்திருப்பது அழகாய்
இருக்கிறது. இறுதியில் ஹீரோவும் அவரது புது காதலியும் திருமணம் செய்து
கொள்கிறார்கள். ஹீரோயினும் அவளது கேங்ஸ்டர் காதலனமும் திருமனம் செய்ய வருகையில்
அவள் மீண்டும் ஓடிப்போடிகிறாள். இப்படியாக முடிகிறது படம்.
ஒரு புத்திசாலித்தனமான
படம் பார்த்த திருப்தி கிடைத்தது. இதிலிருந்து எந்த எந்த காட்சிகள் நம் தமிழ்
படங்களில் இடம்பெறப்போகின்றன என்பது தெரியவில்லை. விரைவில் எதிர்பார்க்கலாம். கொரியப்
படங்களை அதன் அழகிற்காகவே பார்ப்பேன். இந்த படம் அதையும் தாண்டி என்னை ஈர்த்தது.
Couples 2011 Korean movie http://www.youtube.com/watch?v=9mfUspqIa8c
Couples 2011 Korean movie http://www.youtube.com/watch?v=9mfUspqIa8c
No comments:
Post a Comment