என ட்வீட்டர் நண்பர்களுக்கு வணக்கம். இங்கே ட்விட்டரில் நடக்கும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது என்னை அவர் பாலோ பேக் (Follow Back) செய்யவில்லை என்பதே. பலரது மன வருத்தத்துக்குரிய் விஷயமாக மாறி வருகிறது இது.
ட்விட்டர் என்பது எனது நண்பர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு புது விஷயத்தை அல்லது ஆச்சர்யத்தை அல்லது அவசர செய்தியை கூட்டாக தெரிவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சமூக வலைத்தளம்.
நான் இன்று கோவை போகிறேன்.
நான் சென்னை வந்திருக்கிறேன். யாரையாவது பார்க்க முடியுமா.
இங்கே ஏர்போர்ட்டில் நான் இன்று ரஜினியை பார்த்தேன்.
எனக்கு உடனடியாக உதவி தேவை.
இப்படி விஷயங்களை பகிரவே பயன்படுத்தப்பட்டது. விரவில் இது ஒரு instant news channel மாதிரி ஆகிவிட்டது .இதிலிருந்து நிருபர்கள் க்ளூ எடுத்து பின் செய்தி சேகரிக்க ஆரம்பித்தார்கள். இதன் மூலம் பரப்பட்ட செய்திகள் பல மாற்றங்களை ஏற்படுத்த ஆரம்பித்தன. அரசுகள் மாறின. உதாரணம் எகிப்து. நிறுவனங்கள் அடிபனிந்தன. பல நிறுவனங்களில் சேவைகள், பொருட்களின் தரம் இங்கே விமர்சிக்கப்படும் போது அந்த நிறுவனங்கள் அதன் தாக்கம் கண்டு மிரண்டு போயின. அவர்கள் பற்றி செய்திகள் வந்தால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தனி அதிகாரிகளை நியமித்தன. மும்பை குண்டு வெடிப்பு சமயத்தில் அனைத்து தொலைத் தொடர்பு வழிகளும் அடைக்கப்பட ட்விட்டர் நண்பர்களிடையே செய்திகளை பறிமாறிக் கொள்ள பயன் படுத்தப்பட்டது. வாகனங்கள அனைத்தும் பிரதான சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என கூறியிருந்தமையால அங்கங்கே சிக்கிக் கொண்டவர்கள் ட்விட்டர் மூலம் நண்பர்கள், நண்பர்களுக்கு நண்பர்கள் பலரை அடையாளம் கண்டு அன்றைய இரவை கழித்தார்கள். கார்பரேல் நிறுவனங்கள் தங்கள் நிகழ்வுகள்(events) , புதிய பொருள் அறிமுகம் முதலியவற்றை ட்விட்டரில் அறிவித்தன. பிரபலங்களின் ரசிகர்கள் பிரபலங்கள் பற்றி செய்திகளை அறிவிக்கவும் / அறியவும் ட்விட்டரை பயன்படுத்தின.
இப்படி ட்விட்டர் பல விதங்களில் பயன்படுத்தபடுகிறது. இந்த விஷயங்கள் எல்லாம் இதை படிப்பவர்கள்க்கும் தெரிந்திருக்கலாம். இப்போது நாம் விஷயத்திற்கு வருவோம்.
நான் எதற்காக ஒருவரை பாலோ செய்யவேண்டும். அவர் சொல்லும் விஷயங்கள் எனக்கு பயன்படும் அல்லது விருப்பமான ஒன்று என்பதால். அவர் சொல்லும் விஷயங்கள் அல்லது அவரை எனக்கு பிடிக்கும் என்பது. இதையும் மீறி அவர் எனது நண்பர் அல்லது எனக்கு பரிச்சியமானவர் என்பதும் ஒரு காரனம். இதன் மூலம் நான் அவர் போடும் ட்விட்டுகள் மூலம் எனக்கு வேண்டிய விஷயங்களை தெரிந்துகொள்வேன்.
நான் ஒருவரை பாலோ செய்கிறேன் என்பதாலேயே அவரும் என்னை பாலோ பேக் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னுடைய விருப்பங்களை போலவே அவருக்கு என தனி விருப்பங்கள் இருக்கலாம்.அதற்கு தீணி போடக் கூடியவர்களையே அவர் தொடர விரும்புவார். இதுதானே இயற்கையாக நடக்கக் கூடியது. விதிவிலக்காக அவரது நண்பர்கள் தெரிந்தவர்கள் என ஒரு சிலரையும் தொடரலாம்.
நமது தமிழ் ட்விட்டர் கலாச்சாரம் வேறு விதமாக இருக்கிறது. இங்கேயும் புது விஷயங்கள, செய்திகள், தகவல்கள் வந்து சேருகின்றன. அதையும் மீறி இது இணைய நட்பை பெருக்கும் ஒரு தளமாக உருவாகிவிட்டது. இது உலக அளவில் நடந்தாலும் தமிழக ட்விட்டர்களிடையே அதிகமாக இதற்காக மட்டுமே எனவும் பார்க்கப்படுகிறது. இதனால் இங்கு பாலோ பேக் என்பது அதிகமாக எதிர்பார்க்கப் படுகிறது. பாலோயர்ஸ் எண்ணிக்கை பெருமையாக கருதப்படுவதும் இதற்கு காரணம். அதிக பாலோயிங் இருந்தால் பல முக்கிய தகவல்கள் அவர்கள் பார்வைக்கு வருவதில்லை என் நினைப்பவர்கள் பாலோயிங் எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க நினைப்பதில் எந்த தவறுமில்லை. சந்து என இங்கு அழைக்கப்படும் Timeline படிக்க ஏதுவாக அவர்களுக்குரிய விஷயங்கள் மட்டும் அங்கு வரும்படி பார்த்துக் கொள்வது அவர்களின் சுதந்திரம். இந்த சின்ன விஷயத்தை அடுத்தவரின் பார்வையில் இருந்து புரிந்து கொண்டால் அவர் என்னை பாலோ பேக் செய்யவில்லை எனற பிரச்சனை வராது என் நினைக்கிறேன். இதில் ஈகோவிற்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை.
உங்களின் ட்விட்டுகள் நல்லதாய் இருந்தால் அடுத்தவரின் பார்வைக்கு அதுவாய் போகும். Retweet மற்றும் Favourties என பல வழிகளில் இது நடக்கும். அப்படி அடிக்கடி நடக்கையில் நீங்கள் யாரென்று அடுத்தவர்கள் வந்து பார்ப்பார்கள். பிடித்திருந்தால் அவர்களும் உங்களை பாலோ செய்வார்கள். இப்படித்தான் இது நடக்க வேண்டும். ஆகவே உங்களது ட்வீட்டுகளின் தரத்தை உயர்த்துங்கள். உங்களை முன்னிலை படுத்த நீங்களாகவே மற்ற ட்வீப்புகளுக்கு மென்ஷன் போட்டு ட்வீட்டுங்கள். ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள். நிறைய கவனியுங்கள்.
பழைய ட்வீப்புகள் புதிதாய் வருபவர்களுக்கு எப்படி ட்வீட்ட வேண்டும், என்ன ட்வீட்ட வேண்டும் என்பதை அவ்வப் போது கூறலாம். புதிதாய் வருபவர்களில் திறமை மிக்கவர்களை தயங்காமல் பாலோ பேக் செய்யலாம். அவர்களின் ட்வீட்டுகளுக்கு Retweet மூலம் அங்கீகாரம் வழங்கலாம். சீனியர்ஸ் என்ற முறையில் பின் வருபவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டியது உங்களின் கடமையும்கூட.
பழைய ட்வீப்புகள் புதிதாய் வருபவர்களுக்கு எப்படி ட்வீட்ட வேண்டும், என்ன ட்வீட்ட வேண்டும் என்பதை அவ்வப் போது கூறலாம். புதிதாய் வருபவர்களில் திறமை மிக்கவர்களை தயங்காமல் பாலோ பேக் செய்யலாம். அவர்களின் ட்வீட்டுகளுக்கு Retweet மூலம் அங்கீகாரம் வழங்கலாம். சீனியர்ஸ் என்ற முறையில் பின் வருபவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டியது உங்களின் கடமையும்கூட.
பொதுவில் உங்களை உங்க்ள் பலவீனங்களை வெளிப்படுத்திக் கொள்ளாதீர்க்ள். பச்சாதாபம் தேட முயற்சிக்காதீர்கள்.
மீண்டும் சந்திப்போம் பேக் ஐடி பற்றிய ஒரு பதிவில்.
Happy Tweeting......
அண்ணே, அருமையான பதிவு. இந்த விசயத்தை நானும் மூன்று நாட்களாக கவனித்து வருகிறேன். நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை. பிரச்சனையே நம் ஆட்கள் அதீதமாக உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்கிறார்கள். ட்விட்டர் என்பது பேஸ்புக் போல நண்பர்களுக்குள் புழங்கும் இடமில்லை. இங்கு ஒருவரின் கருத்துக்கள் நன்றாக இருந்தால் தொடரப்படுவார்கள் என்னும் அடிப்படை உண்மையை உணர மறுக்கிறார்கள்.
ReplyDeleteஇரண்டாவது பிரச்சனை முன் பின் யோசிக்காமல் அதீதமாக நட்பு பாராட்டிவிட்டு பின் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். நெருங்கிய நண்பர்களானாலும் மனைவியானாலும் அவரவருக்கு உரிய சுதந்திரம், உரிமை மற்றும் இடைவெளியை கொடுக்க வேண்டும். இந்த இடைவெளிக்குள் அனாவசியமாக இன்னொருவர் நுழையும் போது சண்டை சச்சரவுகள் வருகிறது. இவ்வகையான சண்டைகள் நம் சமூகத்திலும் நடக்கிறது.
இந்தப் பிரச்சனைகளை தவிர்விப்பதற்கு தங்கள் கீச்சுகளாலே தான் தாங்கள் தொடரப்படுகிறோம் என்பதை முதலில் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். பின் நண்பர்களுக்கு உரியமையான இடைவெளிக்குள் புகாமல் நட்பு பாராட்ட வேண்டும். இதனால் தேவையற்ற மன கசப்புகளையும் சண்டைகளையும் தவிர்த்துவிடலாம்.
முடிவாக சமூகத் தளங்களுக்கு பெரும்பாலும் பொழுது போக்குவதற்காகவே வருகிறோம் என்ற உண்மையை உணர்ந்து, சந்தோஷமாக இருந்துவிட்டு செல்ல வேண்டும் :)
@Pulavar Tharumi
Deleteஉண்மை சொன்னீர்கள்...
யதார்த்தம்!
ReplyDeleteநல்ல பதிவு. ட்விட்டரில் பலரும் சினிமாகாரர்களை கண்மூடித்தனமாக பாலோ பண்ணுவதையும் அவர்கள் அனுப்பும் சம்பந்தாசம்பந்தமில்லாத குப்பைகளை re-tweet பண்ணுவதையும் கண்டு மனம் நொந்திருக்கிறேன்..அதேபோல் யாருக்கோ நேரடியாக சொல்லவேண்டியதை மறைமுகமாக tweet மூலமாக பலர் அறிய சொல்வதும் அதிகம் பார்க்க முடிகிறது..
ReplyDeleteபிரபல பதிவர் சிலர் அறிவுஜீவித்தனமாக புதியவர்களை அலட்சியம் செய்வது சரியா? எனக்கு நேர்ந்த அனுபவம் ஒன்றை சொல்கிறேன், ஒரு விவாதம் நடந்து கொண்டிருந்த போது அதை சரியாக இனம் கண்டு இதை தானே சொல்கிறீர்கள் என்றேன், அதற்கு அவரின் பதில்" என்னையா இப்படி படுத்துறே நீ யார்?", அவரை நான் ஒருவருடமாக பின் தொடர்கிறேன், அவர் என்னை பின்தொடர்பவர் அல்ல. எனது கணிப்பை அவருக்கு பிடித்தவர் சொன்னபோது அதை ஆமோதித்து சிலாகித்தார். இது சரியா?
ReplyDeleteவேறெங்கோ கமெண்டுவதற்கு..., இன்று கமெண்டவேண்டிய கட்டாயம்...!
ReplyDeleteஉங்களின் பதிவு அருமை.. அதிலும் உண்மை.
ட்விட்டரை அதன் பிண்ணனியை அறியாத மக்களை மாக்கள் என்று தான் சொல்ல வேண்டும்..!
ட்விட்டரில் சேர்ந்தவுடன் பாலோவேர்ஷ் வேண்டுமாம்.., RT வேண்டுமாம் ..!! அதிலும் பிச்சைகாரனை விட மோசமாக இறைஞ்சுகிறார்கள் டைம் லைனிலேயே.
அதிகமாக ஏதும் சொன்னால் பிரச்சினை ஆகிவிடும் போல். உண்மையான ட்வீப்'பாகவே நானும் இருக்க விரும்புகிறேன்..!
பழைய ஆட்கள் அடிக்கடி இத ஞாபகபடுத்தும் விதமா அப்பப்போ ட்விட்டினா நல்லாயிருக்கும்..!
அருமையான பதிவு செந்தில் சார்..!
ReplyDeleteசந்தேகங்கள் தீர்ந்தது!!!
ReplyDeleteமகிழ்ச்சி