Monday, 14 May 2012

TNMegaTweetup – வரவு செலவு கணக்கு


TNMegaTweetup – வரவு செலவு கணக்கு

TNMegaTweetup என்ற இந்த தமிழ் கீச்சர்களின் சந்திப்பு 13/May/2012 மதியம் 3.00 மணி அளவில் சென்னை அடையார் இந்திரா நகர் இளைஞர் விடுதியில் உள்ள Open Air Auditorium இல் நடந்தது. அதன் வரவு செலவு கணக்கு பதிவு இது. 

விழாக் குழுவினர் @expertsathya @balu_sv @karaiyaan 

ஒரு பொது நிகழ்வு நட்த்த வேண்டும் என்றால் பணம் தேவை. மெகா ட்வீட்டப் என முடிவு செய்தபின் இதற்கு எவ்வளவு செலவு ஆகும் அதற்கு பணம் எப்படி வரும் என்ற குழப்பங்கள் இருந்திருக்கும். விழா வெற்றிகரமாக முடிந்துவிட்ட்து. இதற்குரிய செலவுகளுக்கான பணம் எப்படி வந்தது அதை அப்படி செலவு செய்தோம் என்பதற்கான வரவு செலவு விவரம் கீழே. 

வரவு கணக்கு:

இதில் 1000 ரூபாய்க்கும் மேலே கொடுத்தவர்களின் பெயர்களை தனியாக கீழே.Sl. No
Twitter Handle
Amount(Rs)
1
@ravan181
10000.00
2
@Anandraaj04
5000.00
3
@venkat1India
2500.00
4
@amas32
2500.00
5
@thiru_navu
1000.00

Total
21000.00


இரவு விருந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததால் விழாவிற்கு வருபவர்கள் அவர்கள் விருப்பட்டால் 200 ரூபாய் வழங்கலாம் என அறிவித்திருந்தோம். அந்த வகையில் விழா அரங்கில் வந்த வசூல்Collection - Rs. 11,600.00

மொத்த வரவு 
Sl. No
Details
Amount(Rs.)
1
Sponsors
21,000.00
2
Collection
11,600.00

Total
32,600.00


செலவு கணக்கு: 

Sl. No
Details
Amount(Rs.)
1
Catering – 125 Nos at the rate of Rs.160 / head, Service Tips
20,500.00
2
Hall Charges with Electricity, Chairs and Cleaning
8,000.00
3
Projector and Speakers Rent
2,000.00
4
Water
125.00
5
Gift for Mother’s day
500.00
6
Table Rent
250.00

Total
31,375.00


வரவு செலவு கணக்கு

Particulars
Amount (Rs.)
Income
32,600.00
Expenses
31,375.00
Balance In Hand
1,225.00


மற்ற விவரங்கள்:

@ravan181 மற்றும் @Anandraaj04 அவர்கள் இருவரும் @senthilchn  என்னிடம் அவர்களின் பங்களிப்பை அளித்தார்கள். 

@amas32 அரங்கில் அவரது பங்களிப்பை @expertsathaya விடம் அளித்தார்.

@venkat1India மற்றும் @thiru_navu ஆகியோர், எல்லோரும் பணம் செலுத்திய இடத்திலேயே அவர்களின் பங்களிப்பை செலுத்தியிருக்கிறார்கள். 

அரங்கில் வசூல் செய்தவர் @k7classic. இறுதி வசூல் கணக்கை பார்த்தது @senthilchn மற்றும் @k7classic

வரவு செலவு கணக்கு எழுதி சரி பார்த்தது @ravan181 @senthilchn @expertsathaya 


கொசுறு:

என்னதான் வரவு செலவு பதிவு என்றாலும், ட்வீட்டர் பற்றியது என்பதால். இப்படியே முடிக்க மனமில்லை. ஆகவே இந்த கொசுறு.

@ravan181 தனக்கு வேற செலவுகள் இருப்பதால் 10,000 ரூ தான் தற்போது தன்னால் முடியும் என சொல்லி என்னையும் @sesenthilkumar ஐயும் திக்குமுக்காட வைத்து வேடிக்கை பார்த்தார். கலெக்‌ஷனே ஆகாமல் போனாலும் சாப்பாட்டுக்கு சொன்ன காசை கொடுக்க வேண்டி மேலும் ரூ. 15,000.00 அரங்கிற்கு வந்தவுடன் என்னிடம் கொடுத்து என்னை பாவக்காரனாக பார்த்தார் இவர். நல்ல வேளை நம் மக்கள் மானம் காத்தனர். 

@Anandraaj04 தான் வரமுடியாது என்பது தெரிந்திருந்தும் என்னை துரத்தி கட்டாயப்படுத்தி 5000 ரூ வை என் கணக்கில் சேர்பித்துவிட்டுதான் ஓய்ந்தார். முட்டை பப்ஸ் எல்லோருக்கும் விநியோகம் செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம். இதற்காக மும்பையில் இருந்து அடையாரில் இருக்கும் பேக்கரிகு போன் செய்து விசாரித்தும் வைத்திருந்தார். ஸ்நேக்ஸ் வேறு ஏற்பாடு செய்திருந்ததால் அவரது விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை.

@venkat1India தன் பெயர் வெளியே தெரியவேண்டாம் என கூறியிருந்தார். நான் அவரது twitter handle மட்டுமே பயன் படுத்தி இருக்கிறேன். :) 

நமது சக கீச்சர் என்ன நிலையில் இருந்தார் 14/05/2012 காலை எனக்கு போன் செய்து, தல நான் பதிவிவேட்டில் ரூ.200 எழுதிவிட்டேன் ஆனால் பணம் கொடுக்க மறந்துவிட்டேன். நீங்கள்தான் கணக்கு பார்க்கிறீர்களாமே எங்கே வந்து கொடுக்கட்டும் என்றார். @k7classic விவரம் கேட்க போன் செய்தால் அமாங்க என்ன செய்ய குறைந்தது நான் போட்டுட்டேன் என்கிறார். அதிகமா குறைந்திருந்தா என்ன செய்திருப்பீர்கள் என்றால் அப்போதும் இதுவே என்றாரே பார்க்கலாம். என்ன மனிதர்கள் இவர்கள் எல்லாம். எனக்கு இன்னமும் வியப்பு அடங்கவில்லை. 

@amas32 மேடம் யாரிடம் பணத்தை கொடுப்பது என விழித்து கொண்டிருந்தார். போ கேட்டு வாங்கி வந்துவிட்டோமில்லையா. கிட்டத்தட்ட வழிப்பறி போலத்தான் ( சும்மா சொன்னேன் நண்பரே) 

@jesuthangadurai அனைவருக்கும் நினைவுப் பரிசாக TNMegatweetup மற்றும் அவரது handle பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு அழகான் பேனாவை அவரது செலவில் வாங்கி வந்து வழங்கினார். 200 பேனாக்கல் எடுத்து வந்தார். மீதம் எடுத்து போக நேர்ந்தது.

@iParisal தந்து பிறந்தநாளை முன்னிட்டு அவரது செலவில் அனைவருக்கும் லட்டு, ஓல பகோடா மற்றும் மிரண்டா/கோக் வழங்கினார். 

ஒரு வருத்தம் : 125 சாப்பாடு சொல்லியிருந்தோம். பத்தாமல் போயிடுமோ என்ற பதட்டத்தில் இருந்தோம். வந்தவர்கள் 118 என் பதிவு காண்பிக்கிறது. ஆனால் 70-75 பேர்தான் உணவு உண்டனர். இது சற்று ஏமாற்றம் அளித்தது. ஏழை நாடான இந்தியாவில் உணவை வீணாக்குவது என்பது பாவமான செயல் போல தெரிந்ததால் இந்த வருத்தம். யாரையும் புண்படுத்த அல்ல. மீதம் இருக்கிற ரூ. 1,225.00 ஐ என்ன செய்யலாம் என கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. 


இந்த நிகழ்வு ஒரு வருடாந்திர தொடர் நிகழ்வாக அமைய எல்லோரும் விரும்புகிறோம். தொடர்ந்து வரும் நிகழ்வுகள் இன்னமும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிகழும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் பிரிந்தோம் மீண்டும் சந்திக்க.

வாழ்க தமிழ்... வளர்க நேசம்... 

28 comments:

 1. நிதியமைச்சராகிடீங்க... வாழ்த்துகள் :-)

  ReplyDelete
  Replies
  1. :) இது சங்கடமான வேலை தல

   Delete
 2. Twitamils போல ஏதாவது தமிழ்-பொது-ட்விட்டர் விஷயங்களுக்கு பயன்படுத்தலாமே?

  ReplyDelete
  Replies
  1. @மல்லிகார்ஜூனன்

   Twitamils என்பது என்ன.. தங்கள் கருத்து எனக்கு புரியவில்லை..

   Delete
 3. வாழ்க வளர்க

  ReplyDelete
 4. அக்கவுண்டு நம்பர் தர்ரேன் போட்டுடுங்க !

  ReplyDelete
  Replies
  1. ஏன் ஏன் தல இப்படி... :)))

   Delete
 5. கணக்கினை வெளிப்படையாக வைத்தது பாராட்டக்கூடிய செயல். இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு இது நல்ல முன்னுதாரணம்.

  ReplyDelete
  Replies
  1. @யுவகிருஷ்ணா

   மிக்க மகிழ்ச்சி. இது முதல் நிகழ்ச்சி என்பதும் எந்த வித அமைப்பாகவும் செயல்படவில்லை எனும்போது கணக்கை முழுதும் வெளிப்படையாக பொதுவில் பார்வைக்கு வைப்பது அவசியமாகிறது. பின்னர் வருபவர்களுக்கு இது ஒரு வழிகாட்டுதலாகவும் அமையும் என நினைக்கிறோம்.

   Delete
 6. மீதித்தொகையை, கோவை-மீட்’டுக்கு பயன்படுத்திக்கொள்லலாம்! ராவன் அவர்களில் ஆசி மிகச்சிறந்தது! அவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த மீட், மங்கள கரமாக தொடரும் என்பதில் ஐயமில்லை! கோவை மீட் பிரமாண்டமாக இருக்கும் என்று இப்பொழுதே சொல்லிக்கொள்கிறேன்! :)

  ReplyDelete
  Replies
  1. @சு.திருநாவுக்கரசு,

   மிக்க மகிழ்ச்சி தல.. இதுதான் எங்களின் எண்ணமும்... முடிந்தால் ஒரு அமைப்பாக உருவாக்கும் எண்ணமும் இருக்கிறது.. சில தினங்களில் கலந்தாலோசித்தால் வழி பிறக்கும் :)

   Delete
 7. பங்கு பெற முடியவில்லை. வாழ்த்துகள். ஒரு எண்ணம்.
  தமிழ் டுவிட்டர்கள் குழுமம் என்று ஒன்றை ஆரம்பித்து, அதை பதிவு செய்யவும். அதற்கு பொறுப்பாளர்களை வருடம் ஒரு முறை தெரிவு செய்து விழா நடக்க ஏற்பாடு செய்யலாம். வங்கியில் கணக்கு ஆரம்பித்து அதை எல்லாருக்கும் தெரிய படுத்தினால் விழாவுக்காக மட்டுமல்லாமல் ஒவ்வொரு டுவிட்டரின் விருப்பத்திற்கு ஏற்ப அவ்வபொழுது வங்கியில் நேரடியாக பணம் செலுத்தலாம். அதை வைத்து ஒவ்வொரு வருடமும் #TNMegaTweetup மிக சிறப்பாக நடத்த முடியும்.

  ReplyDelete
  Replies
  1. @Vijay,

   கண்டிப்பாக அதை நோக்கித்தான் இந்த பயணம் இருக்க வேண்டும்.. மற்றவர்களின் கருத்துகள் என்னவாக் இருக்கிறது என பார்க்கலாம் தல :)

   Delete
 8. மிகப் பெரிய விஷயம்! வாழ்த்துகள்! அடுத்தமுறை கோவையில் நடத்தலாமே!

  ReplyDelete
  Replies
  1. @ரமேஷ்,

   உங்களை சந்திக்கு வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன் தல.. :)

   Delete
 9. ஏதாவது நியுஸ் சேனலில், பேப்பரில் இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டாதா? தகவல் தருக.

  ReplyDelete
  Replies
  1. @கார்த்திகை,

   இதுவரை அப்படி எதுவும் தெரியவில்லைங்க..தெரிந்தால் தெரிவிக்கிறேன்

   Delete
 10. ஹாலுக்குள்ள வந்த அப்புறம் தான் சொன்னாங்க!
  முன்னமே சொல்லியிருந்தா கலெக்ஷன் எகிறி இருக்கும். ;)

  ReplyDelete
  Replies
  1. @Srini,

   முன்னமே அறிவித்ததுதான்... ஆனால் அதை எதிர்பார்த்திருக்கவில்லை.. அது ஒரு சோதனை முயற்சியாகவே செய்யப்பட்டது... நம் மக்கள் செய்த contribution ஆல் மிகவும் மகிழ்ச்சி... இது ஒரு நல்ல ஆரம்பம்..

   Delete
 11. நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்துள்ளீர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. @வி.பாலகுமார்,

   மகிழ்ச்சிங்க :)

   Delete
 12. முதல் முயற்சி யே இப்படி என்றால் நிச்சயமாக உங்களின் திட்டமிடல் அருமை நண்பா வாழ்த்துக்கள் அடுத்த முறை என் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. @அப்புக்குட்டி,

   மகிழ்ச்சி தல... கண்டிப்பாக அனைவரும் இணைவோம்..

   Delete
 13. மீதம் இருக்கிற ரூ. 1,225.00 ஐ என்ன செய்யலாம் என கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
  //

  ஏதாவது ஏழைக்குழந்தைகளை படிக்க வைக்க உபயோக்கிக்கலாம்.

  அப்படி ஏதாவது எண்ணம் இருந்தால் , எனது மெயிலுக்கு தொடர்பு கொள்ளுங்க.. நானும் அனுப்பி வைக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. @முனைவ்வ்வர் பட்டாபட்டி,

   இது நல்ல சிந்தனை தல.. அனைவரையும் கலந்தாலோசித்து என்ன செய்வது என்று முடிவு செய்யப்படும்

   Delete
 14. கலந்து கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு... என் வாழ்த்துக்கள்..


  Wow...
  I really impressed....

  ReplyDelete
  Replies
  1. @முனைவ்வ்வர் பட்டாபட்டி,

   மகிழ்ச்சி தல..

   Delete