அரசாங்க ஊழியர்கள் அதிகமாக கூடும் இடங்களில் உட்கார்ந்து கவனித்தாலே பல உண்மைகள் கசியும்.. அரசு அலுவலகங்களுக்கு அருகில் இருக்கும் உணவகங்கள், டீ ஸ்டால்களில் இது சகஜம்.. இன்று நான் கவனித்த உரையாடல் மாநகராட்சி போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பேச்சை கேட்டு நான் அறிந்தவை..
புதிதாக 1500 அல்லது 800 பேர் பணியில் சேர்த்திருக்கிறார்கள்
விரைவில் மினி பேருந்துகள் இயக்கப்படலாம்
யாரோ வெகு சில போக்குவரத்து கழக தலைமை அலுவலக ஊழியர்கள்/அறிந்தவர்கள் பயணிப்பதற்காக மட்டுமே சில புது ரூட்டுகளில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் நிறைய ரூட்டுகள் ரத்து செய்யப்பட்டு மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாக்கப்படுகின்றனர். இது பீக் ஹவரிலும் நடக்கிறது.
இவை தவிர இன்று அறிந்த வேறு சில விவரங்கள்.
வடபழனி 100அடி சாலை விரிவாக்கத்திறகாக கட்டிடங்கள் இடிக்கப்படுவதை எதிர்த்து ஸ்டே வாங்கியிருக்கிறதாம் சிவன் போவில் நிர்வாகம். வடபழனி சிக்னல் அருகே சாலையின் இருபுறமும் சிவன் கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்கள் மட்டுமே இன்னமும் இடுக்கப்படாமல் இருப்பதாக செய்தி.
நேற்று நடந்த ஆபரேஷன் ஆம்லாவால் என்ன பயன் என தெரியவில்லை. வழக்கம் போல drunken driving சிக்கியது போன்ற விஷயங்களதான் நடந்தேறியிருக்கும். நேற்று யாரையும் எங்கும் எந்த போலீசும் சந்தேகக் கண்களோடு பார்க்கவில்லை. நான் பார்த்த இடங்களிலெல்லாம் போலீசார் வழக்கம் போல உட்கார்ந்து கும்பலாக பேசிக்கொண்டுதானிருந்தனர். வடபழனி கோவிலில் மட்டும் அவ்வப்போது ஒன்றிரண்டு பைகளை சோதனை செய்தனர்.
கிண்டி பேருந்து நிலையத்திற்குள்/அருகில் ஷேர் ஆட்டோக்களை அனுமதிப்பதில் திடீரென்று கெடுபிடி காட்டுகின்றனர் போக்குவரத்து போலீசார். இதனால் பயணிகள் பல இன்னல்களுக்கு பீக் ஹவரில் ஆளாகின்றனர். போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தாலேயே ஷேர் ஆட்டோக்களை நாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் பயணிகள். அதை சரி செய்யாமல் இருக்கும் மற்ற வசதிகளையும் ஏன் இவர்கள் தடுக்கிறார்கள் என புரியவில்லை.
வெகு நாட்களுக்கு பிறகு வடபழனி நம்ம வீடு வசந்த பவனில் இன்று மதியம் உணவருந்தினேன். உருளைக்கிழங்கு சரியாக வேகவில்லை என்பதை சப்ளையரிடமும் சூப்பர்வைசரிடம் கூறினேன். நான் சொல்லும்போது மதியம் மணி 3.00. இதுவரை யாருமே சொல்லவில்லையே சார் என்றார் ஆச்சர்யமாக சூப்பர்வைசர். உருளைக்கிழங்கை எடுத்து கையால் நசித்து காண்பித்து நம்பவைத்தேன் அவரிடம். பிறகு தனியாக சப்ளையர் வந்து ஆமாம் சார் வேகவில்லைதான் என்றார். அப்போது அவர் கூறிய தகவல் வசந்த பவன் ஹோட்டலகளுக்கெல்லாம் குழம்பு, பொறியல், மசாலா, துவையல், அவியல், கூட்டு, கடையல், தோசை மாவு போன்றவை கிண்டியில் தனியாக ஒரே கூடத்தில் செய்யப்பட்டு அனைத்து இடங்களுக்கும் சப்ளை செய்யப்படுகிறதாம். சாதம் வடிப்பது, அப்பளம் வறுப்பது, தோசை வார்ப்பது போன்றவைதான் அவ்விடத்தில் நடக்கிறதாம். அப்படியானால் இன்று எல்லா வசந்த பவன் கடைகளிலும் உருளைக்கிழங்கு வேகாமல்தான் இருந்திருக்கவேண்டும். கண்டிப்பாக நாலை கம்ப்ளெயிண்ட் வரும் சார். சரி செய்வார்கள் என்றார். இது எனக்கு புதிய செய்தி.
எஸ்.ராமகிருஷ்ணனின் “பயணங்களும், தீராப் ப்ரவசங்களும்” உரை சங்கம்4 நிகச்வில் இன்று. தலைப்பு அருமைதான். எனக்கு என்னவோ பலர் அவரை பற்றி உருவாக்கிவைத்திருந்த ஆகோ ஓகோ பிம்பம் நியாயப்படுத்தப்படவில்லை அவரது உரையில். விஷயங்கள் நன்றாய்தான் இருந்தது. சுவை அத்தனை இல்லை. நேரம் பற்றாக்குறையால் அப்படி எனக்கு தோன்றியதா என தெரியவில்லை. என் இலக்கிய அறிவும் கிரகிக்கும் தன்மையும் கம்மிதான்.
PETA அமைப்பு மாமிச உணவு உட்கொள்வதை எதிர்க்கிறதா. இப்படி ஒரு கேள்வி இன்று சங்கம்4 நிகழ்வில் தியடோர்.பாஸ்கரனால் என் மனதில் ஆழமாக பதிய வைக்கப்பட்டது.
எனக்கு தோன்றிய கனவு. வெகு நாட்களுக்கு பிறகு விழித்த பின்னும் நினைவில் நின்ற கனவு. காடோ அல்லது வனவிலங்கு சரணாலயமோ தெரியவில்லை. தடைகளையும் ஆழமான கால்வாயையும் தாண்டி என்னை தாக்க வந்த கரடி திடீரென்று உறைந்து போய் சிலையாகிறது. அதை தொடர்ந்து ஏதென்று தெரியாத சிறு விலங்கு கூட்டம் ஒன்று என்னை துரத்துகிறது. அருகில் வருகையில்தான் கவனிக்கிறேன் அது குரங்கு கூட்டம். நான் என் கேமிராவை எடுத்து அவற்றை படம் பிடிக்க ஆரம்பித்தவுடன் அவை சாந்தமாகி விலகிச் செல்கின்றன. அவற்றிற்கு நான் தீங்கிழைக்க மாட்டேன் என அவை உணர்ந்ததாய் நான் உணர்ந்தேன். பாதுகாப்பு வாய்க்கலை தாண்டி ஒரு புலி பாய்கிறது. பல மக்கள் பயந்து ஓடுகிறார்கள். ஒரு இளம் பெண் நான் எச்சரிப்பதையும் கொருட்படுத்தாமல் அந்த புலியின் குட்டியை அதன் அருகில் எடுத்து சென்று சேர்க்கிறாள். அந்த புலி ஏதும் செய்யவில்லை. அந்த புலியும் மற்ற மக்கள் ஓடும் திசையிலேயே மக்களோடு சேர்ந்து ஓடி மறைகிறது.

write more. its nice flow
ReplyDeleteகண்டிப்பாக முயற்சிக்கிறேன் சார் :)
Delete