Friday, 7 December 2012

பெண்களுக்கு பிடிக்கிற மாதிரி ட்வீட்டுவது எப்படி



சரி என்ன செய்யலாம்னு யோசிக்கையில் இப்படி ஒரு ட்வீட் தோன்றியது. இதை எழுதினால் என்னவெல்லாம் ரெஸ்பான்ஸ் வரும்னு பார்க்கலாமுன்னு இதை எழுதினேன்...
பெண்களுக்கு பிடிக்கிற மாதிரி ட்வீட்டுவது எப்படின்னு தெரிஞ்சுக்கனும்னா இங்க யாரிடம் கேட்கலாம்.. #உதவி

இப்படி ஒரு அப்பவித்தனமான பதில்
@senthilchn நீங்கள் பெண்களையே கேட்கலாம் நண்பா..#help


ஓரளவு சரியான லிஸ்ட் கொடுத்தவர் இவர் மட்டும்தான்
@senthilchn @iKaruppiah , @kattathora @writercsk @RazKoLuஇவங்கதான் பிளேபாய்ஸ் தல....

இது 100% உண்மை..
@senthilchn csk writer?

இவர் எங்கேயோ பயங்கரமாக அடி வாங்கியிருக்கிறார் என்பது தெரிகிறது...
@senthilchn இங்க பொண்ணுகளே இல்லை. எல்லாம் ஃபேக்தான். நேரத்த வேஸ்ட் பன்னாதிங்க தல


இது என்னத்துக்கு...
மகளிர் சுய உதவி குழுவிடம்RT"@senthilchn: பெண்களுக்கு பிடிக்கிற மாதிரி ட்வீட்டுவது எப்படின்னு தெரிஞ்சுக்கனும்னா இங்க யாரிடம் கேட்கலாம்.#உதவி

இவர் பாருங்க என்னைய வம்புல மாட்டி விடறதுலேயே குறியாய் இருக்கார்..
@senthilchn ஒரு பெண்ணைக் காதலிக்கத் துவங்குங்கள். எல்லாம் உங்களுக்குக் கைக்கூடும்...

இந்த அம்மணி ஒருத்தர்தான் பெண்களில் இதற்கு பதில் தந்தது..
@Smartsharn @senthilchn enna problem may i help u

என்ன ஒரு கரிசனம்.
@senthilchn உங்களுக்கே இந்த நிலமையா!!!

ஓரளவு நியாயமாகவும் பதில் தந்துள்ளார் இந்த பெண் கீச்சர்...
@Smartsharn paththen paththen. enaku theriyaleye enaku kavithai pitikkum @senthilchn

என்னையே கேள்வி கேட்பதில் இவரை மிஞ்ச ஆளே இல்லை சந்தில் இப்போதைக்கு...
@senthilchn sollunga na1st atha

இந்த பதிலை பலரிடம் எதிர்பார்த்தேன். இவராவது சொன்னாரே...
@senthilchn உங்ககிட்டதான் நாங்க கேட்க்கனும் தல. நீங்க எங்ககிட்ட கேட்ட என்ன அர்த்தம்.

இவரு கோச்சுக்கறாராம். இதை நாங்க நம்பனுமாம்..
. @_itsanand அடப்பாவமே. இன்னைல இருந்து பெண் ட்விட்டர்ஸ்கிட்ட நானா பேசவே மாட்டேன். போதுமா? :P@senthilchn

இதுல சமாதானம் வேற... என்னமோ போங்கப்பா..
@iKaruppiah ரசிகைகள் பாவம் இல்லையா???@senthilchn

நான் எதிர்பார்த்த மற்ற கீச்சர்களான @thoatta @iamkarki @rajanism  @freeyavudu @riyazdentist @iparisal போன்றவர்கள் விடுபட்ட்து எனக்கு அதிர்ச்சியே...

விரைவில் மற்றுமொரு கேள்விக்கான பதிலில் சந்திக்கலாம்...

Monday, 13 August 2012

சென்னையில் ஒரு மழை நாள்


மனம் எந்த வித டென்ஷனும் இல்லாமல் லேசாக இருக்கையில் தன்னை சுற்றி அனைத்தையும் ரசிக்கிறது. மகிழ்ச்சியாக அனுபவிக்கிறது. மழை தந்த இந்த ரம்மியம், மனதில் முழுதாய் குடிகொண்டிருக்க ஓடி வந்து அந்த ஷேர் ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன் வடபழனி என சொல்லிவிட்டு. எப் எம் மில் காதோரம் லோலாக்கு பாடிக்கொண்டிருந்தது. வழக்கம் போல் வெளியே என் கண்களை சுழல விட்டேன். குண்டு பெண்களை அவர்களின் அழகான் சிரிப்பிற்காகவே எனக்கு மிகவும் பிடிக்கும். ஷேர் ஆட்டோவில் இருந்த அந்த குண்டு பெண் என்னை ஓரக் கண்ணால் ஒரு முறை பார்த்தாலும் இன்று நான் இருந்த மனநிலை என்னை வெளியில் பார்க்கச் சொன்னது.

மனசு முழுதும் சந்தோஷத்துடன், நான் எப்போதும் செய்வதுபோல அருகில் இருக்கும் வாகனத்தின் நம்பர்களை கவனிக்க ஆரம்பித்தேன். இது எனது வாடிக்கை. கண்ணில் படும் நம்பர்களை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவேன். முதலில் அது ஒற்றை படை எண்ணா அல்லது இரட்டை படை எண்ணா, பிறகு மூன்றால் வகுக்க முடியுமா, பிறகு அந்த எண்ணில் என்ன விசேஷம் என இப்படியாக என் எண்ணமும் கணக்கும் விரியும். இப்படி பார்த்துக் கொண்டே வருகையில் இன்னமும் நம்பர்கூட எழுதாத புதிய்தாய் வாங்கிய பச்சை நிற டியோ வாகனத்தில் அந்த அழகான பெண்ணும் அவளது ஹெல்மெட்டும் ஏனோ எனக்கு பார்பி பொம்மையைதான் நியாபகப்படுதியது. அவள் அந்த வண்டியில் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து இருந்தது அவளது வனப்புகளை சில கனங்கள் அளவிட வைத்தாலும், மீண்டும் அந்த பார்பியின் நினப்புதான் எனக்கு அவளை பார்க்கையில்.  

முதலில் அந்த தாய்தான் கண்ணில் பட்டாள். இரண்டு சக்கர வாகனத்தில் பின்சீட்டில் உட்கார்ந்துகொண்டு கையில் குழந்தையை வைத்துக் கொண்டும் ஒரு கையால் தலையில் மல்லிகை பூ வைப்பது அவசியமா. அப்படி என்னதான் அவசரமோ என்று திட்டிக்கொண்டேதான் கவனிக்க ஆரம்பித்தேன். அத்தனை சுட்டி அந்த குழந்தை. என்ன ஒரு 2 வயதுதான் இருக்கும். ஒரு 7-8 அடி தள்ளிதான் அந்த வாகனம் நின்றுகொண்டிருந்தது. இருந்தும் அந்த குழந்தை நான் கவனிப்பதை கவனித்துவிட்டான். நான் அவனைத்தான் பார்க்கிறேனா என்ற ச்ந்தேகமா அல்லது நான் என்ன செய்கிறேன் என்று கவனிக்கும் ஆர்வமா தெரியவில்லை என்னை பார்த்தான். நான் வழக்கம் போல சிரித்தேன். அவனும் சிரித்தான். என்னவோ பிகரை மடக்கிய ஆனந்தம் எனக்கு. அந்த குழந்தை என்னை நோக்கி தலையை ஆட்டியது. எனது ஷேர் ஆட்டோவும் அந்த வாகனும் சரியாக நகரத் துவங்கியது. எனக்கும் அந்த குழந்தைக்குமான இந்த உரையாடல் 2 நிமிடம் தொடர்ந்தது. என் மனம் முழுதும் பட்டாம்பூச்சிகளும் வானவில்லும் ஒரே நேரத்தில் அட்டகாசம் செய்தன. அதற்குள் அடுத்த ட்ராபிக் ஜாம். அந்த குழந்தையின் கண் பார்வையை விட்டு நான் அகலும் போது அது யாரயோ தேடிக்கொண்டிருந்தது. அது கண்டிப்பாக நானாகத்தான் இருக்கும். எனது ஷேர் ஆட்டோ ஊர்ந்து கொண்டிருந்த லேனும் அந்த இரண்டு சக்கர வாகனம் இருந்த லேனும் முன்னுக்கும் பின்னுக்குமாக சமமாக நகராததில் மனதிற்குள் நான் என் ஷேர் ஆட்டோ ஓட்டுனரை திட்டிக்கொண்டிருந்தேன். ஷேர் ஆட்டோவில் எப்.எம்மில் நியூஸ் ஆரம்பிச்சாங்க.

அந்த குழந்தையை தோடிக்கொண்டிருந்த போதும், அதன் பார்வையை நான் மீண்டும் இழுக்க முயற்சித்துகொண்டிருந்த போதும் “Jesus Loves You” என கண்ணாடியில் எழுதப்பட்டிருந்த ஆட்டோ குறுக்கே வந்து நின்றது. அதன் ஓட்டுனர் பாவம் என்ன கவலையோ தலை சொறிந்து கொண்டிருந்தார். எங்கோ அவசரமாக போகவேண்டிய கவலையோ அல்லது ஏதோ பணக் கவலையோ அவருக்கு. அவரது கவலையின் பாதிப்பு ஏதுமில்லாமல் பின் சீட்டில் இன்றைய நவீன இளைஞன் தன் ஐபோனை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். ட்விட்ட்ரோ, பேஸ்புக்கோ ஏதோ ஒன்று அவனை ஆட்கொண்டிருந்தது என நினைக்கிறேன். அந்த முகம் வாட்டமும், மகிழ்ச்சியுமாய் மாறி மாறி பிரதிபலித்தது.

ஷேர் ஆட்டோவில் நியூஸ் முடிந்து மெல்ல நலம் வாழ என்னாலும் பாடல் எப்.எம் மில் இசைக்க நான் கண்ட காட்சி என்னையும் அறியாமல் சிரிக்க வைத்துவிட்ட்து. அவசரத்தில் ப்ரேக்கை சரியாக பிடிக்காததால் முன்னே நின்றிருந்த ஒரு பெண்ணின் வாகனத்தில் ஒருத்தர் மோதிவிட்டார். அதை பார்த்த நான் சிரிக்க அதைப் பார்த்து அவரும் சிரிக்க. அந்த நேரம் பார்த்து அந்த பெண் திரும்பி பார்க்க அவருக்கு பயங்கர பல்பு அது. சாரி என்றார் அந்த பெண்ணிடம். ஆனால் அவருக்கு பின்னால் உட்கார்ந்திருந்த அவரது மனைவி இதையெல்லாம் பார்த்து அவரை ஒரு பார்வை பார்த்தாரே அதுதான் ஹைலைட். நான் அவரது நிலையை எண்ணி என்னுள் சிரித்துக்கொண்டேன். அவர் கெஞ்சலாக ஏதோ விளக்கிக்கொடிருந்தார் அவரது மனைவியிடம்.

கோடம்பாக்கம் ப்ரிட்ஜில் ஷேர் ஆட்டோ ஏறும்போது வாகனங்களின் நெருக்கம் அதிகமானது. அடுத்து நின்றிருந்த ஆட்டோவில் மூன்று இளம் பெண்கள். வெளியே பார்த்துக்கொண்டிருந்த என் முகத்திற்கு நேரெதிரே அவர்களின் முகங்கள். கண்டிப்பாக என்னை தவிர்க்க முகத்தை திருப்பிக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. அதில் கடைசியாக இருந்த குண்டு பெண் வழக்கம் போல அவளது சிரிப்பும் அழகு.

மேம்பாலத்தின் மீது வாகனங்கள் மெல்லத்தான் நகர முடிந்தது. அந்த மெதுவான பயணத்தில் பல விஷயங்களை பார்க்க நேர்ந்த்து. சட்டை போட்டுக் கொண்டு கார் ஓட்டி வந்த அந்த பெண் தன் ரியர் மிர்ரரில் யாரையோ தேடிக்கொண்டே வண்டி ஓட்டுவது போலவே எனக்கு தெரிந்தது. எதிரில் வரும் வாகனத்தின் ஹெட்லைட் வெளிச்சம் அவளது கண்ணில் பளீரிடும் போதெல்லாம் அந்த தேடலை நான் ரசித்தேன். நான் அவளை கவனிப்பதை கவனித்த அவள் முதலில் உதடு கடித்துக் கொண்டாள். இன்று பல பெண்களும் தாங்கள் ஏதாவது ஒரு வகையில் ரசிக்கப்படுவதை விரும்புகின்றனர். எப்.எம்மில் உறுதியான குரலில் நானொரு சிந்து பாடிக்கொண்டிருந்தது. அவளது காரை எதேச்சையாக பார்த்தேன். அவள் காரின் மேல் முழுதும் ஏதோ அட்சதை தூவியது போல மஞ்சள் நிறத்தில் சிறு இலைகள் இறைந்து இருந்தது. அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, அயர்ச்சியா என்னவென்று தெரியவில்லை தலையை தன் இருக்கையில் திடீரென்று சாய்த்துக் கொண்டாள். பின் தலையை கைகளில் பொத்தி சோகமான மாதிரி காணப்பட்டாள். இந்த திடீர் மாற்றம் எனக்குள் அவள்மீதும் வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் ஒரு கரிசனத்தை வரவழைத்தது. எதை மறந்தாளோ தெரியவில்லை, அதற்கு பின் என் கண்ணில் இருந்து மறையும் வரை அவளது முகம் பழைய பொலிவுக்கு திரும்பவில்லை.

இவை மற்றும் இல்லாமல் கிடைத்த கேப்பில் பூந்து பூந்து வண்டி ஓட்டிய அந்த இளைஞன், நான் அவனை பார்ர்கிறேன் என்றவுடன் வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டே தன் வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டான். அப்புறம் மாருதி காருக்குள் இருந்து கொண்டு சாலை தெரியாமல் எட்டி எட்டி பார்த்துக் கொண்டே ஓட்டிய பெண். என் நண்பன் லாரன்சின் அப்பாவை நியாபகப் படுத்திய அந்த வயதானவர். அவர் வாகனம் ஓட்டியதும் அமைதியாய் சுற்றும் முற்றும் பார்த்ததும், அவரது உருவமும் எனக்கு லாரன்சின் அப்பாவை நியாகப்படுத்தின. லாரன்சும் இத்தனை வருடங்களில் அப்படி ஆகியிருக்கலாம்.

நான் சிரித்ததையெல்லாம் என்னோடு ஷேர் ஆட்டோவில் இருந்த அந்த குண்டு பெண் ரசித்ததை சிரித்ததை ஓரக் கண்ணால் நானும் ரசித்தேன்.

Thursday, 2 August 2012

கபுல்ஸ் 2011 (Couples 2011) - கொரியன் படம்


நண்பர் ஒருவர் சமீபத்தில் இந்த படம் பார்க்கச் சொல்லி ரெகமண்ட் செய்திருந்தார். யூடியூப் லிங்க் ஆங்கில சப்டைட்டிலுடன் எளிதாக கிடைத்த்து. (http://www.youtube.com/watch?v=9mfUspqIa8c ) இனி படத்தை பற்றி சில வரிகள்.

கதை என்று பார்த்தால் இது ஒரு முக்கோண இல்லையில்லை நாற்கோண இல்லை ஐங்கோண காதல் கதை. ஹீரோ ஹீரோயினை(வில்லி) காதலிக்கிறார். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கையில் அவள் அவரை விட்டு போய்விடுகிறார். ஹீரோ அதற்கு பின் சந்திக்கும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். இதுவரை இது ஒரு சாதாரண முக்கோண காதல் கதை. அவரை விட்டு பிரிந்து போகும் ஹீரோயின் வேறு ஒரு நபரை சந்தித்து அவரை காதலிக்கத் துவங்குகிறார். இந்த புது நபர் ஒரு கேங்க்ஸ்டர். ஹீரோயினுக்கு பிடிக்கவில்லையென தன் தொழிலையே மாற்றிக்கொள்கிறார். இப்போது இது நாற்கோண காதல் கதையாகிறது. இதுகூட பார்த்திருக்கிறோம். ஹீரோ தன்னை விட்டுப் போன ஹீரோயினை கண்டுபிடிக்க தன் பள்ளி நண்பனான ஒரு துப்பறியும் நிபுன்ரின் உதவியை நாடுகிறார். இந்த நண்பனும் நம் ஹீரோயினின் அழகில் மயங்கி அவளை காதலிக்கிறார். இந்த இட்த்தில் இது ஐங்கோண காதல் கதையாகிறது. இதுதான் பட்த்தின் கதை.

இதில் என்ன ஸ்பெஷாலிட்டி இருக்கு என கேட்பவர்களுக்கு. இந்த பட்த்தில் காதல், காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட், நட்பு என எல்லாமே இருக்கிறது. இதை எல்லாத்தையும் விட கதையும் திரைக்கதையும்தான் பட்த்தின் ஸ்பெஷாலிட்டி. இந்த படம் ஆரம்பம் எப்படின்னா ஹீரோ அவர் நண்பனிடம் ஹீரோயினை பற்றி கேட்டுகிட்டே கார் ஓட்டிகிட்டு வருவார். அப்போ எங்கிருந்தோ வந்த பந்து காரின் முன் விழ அதிர்ச்சியில் கார் நிலை தடுமாற எதிரில் வரும் பேருந்து மோதாம இருக்க சடன் ப்ரேக் அடிக்க அதனுள் இருக்கும் ஒரு பெண் தடுமாறி கீழே விழ அவள் மேல் அருகில் இருந்த ஆணும் விழ அவர்களுக்குள் காதல் பிறக்க அவர்களின் கல்யாண பேட்டியில் படம் ஆரம்பிக்கிறது.

படம் கதை சொல்லி வகையை சேர்ந்தது. ஹீரோ, ஹீரோவின் நண்பர், ஹீரொயின், ஹீரோவின் காதலி, ஹீரோயினின் காதலன் என இவர்கள் ஐவரின் பார்வையில் சம்பவங்கள் நகர்கின்றன. இதிலும் ஒரு ஸ்பெஷாலிட்டி. ஒரே சம்பவம் ஒவ்வொருவரும் எதை எப்படி உணர்கிறார்கள் என்பதுதான் அருமை. உதாரணத்திற்கு ஹீரோவை போனில் அழைட்க்கும் அவரது துப்பறியும் நண்பன் அவரை ஹோட்டலுக்கு வர சொல்லுவார். ஹோட்டலுக்கு வந்து ஒரு மணி நேரம் கழித்தே வருவார். இந்த காட்சியை ஹீரோவின் நண்பர் விவரிக்கும் போதுதான் ஏன் அப்படி நடந்த்து என்ற உண்மை தெரியும். ஹீரோவின் வீட்டிற்குள் திருட்டுத்தனமாய் வரும் அவரது நண்பன் அந்த நேரத்தில் வீட்டிற்குள் வரும் ஹீரோவை திசை திருப்பி தப்பிக்கவே அப்படி செய்தார் என்பது அவரது நண்பர் விவரிக்கையில்தான் புரிகிறது. இப்படியாகத்தான் காட்சிகள் நகர்கின்றன படம் முழுதும் சுவாரஸ்யமாக.
ஹீரோ ஹீரோயின் சம்பந்தப்பட்ட மூன்று காதல்கள் மற்றும் ஒரு ஒருதலைக்காதலை தவிர இந்த படத்தில் வேறு மூன்று காதல்களும் இருக்கின்றன. ஆக இவர்கள் அனைவரும் ஒரே இட்த்தில் இருக்கிறார்கள். அந்த இட்த்திலிருந்துதான் படம் ஆரம்பிக்கிறது. அவர்கள் அனைவரும் அங்கிருந்தார்கள் என்பது படம் சுமார் மூன்றில் இரண்டு பங்கு முடிந்த பின்னர்தான் நமக்கு புரிகிறது. திரைக்கதைக்காக வாய்விட்டு சபாஷ் போட வைக்கும் இடம் இது. அந்த மூன்று ஜோடிகளும் அவர்களின் திருமண பேட்டியின் போது அவர்களின் நினைவுகளை தனித்தனியாய் பகிர்வதும் இறுதியில் அவை அனைத்தும் படம் ஆரம்பிக்கும் இடம் என்பதும் அந்த நொடிவரை தெரியாமல் நகர்த்தி வந்து அந்த இட்த்தில் புரியவைத்திருப்பது அழகாய் இருக்கிறது. இறுதியில் ஹீரோவும் அவரது புது காதலியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஹீரோயினும் அவளது கேங்ஸ்டர் காதலனமும் திருமனம் செய்ய வருகையில் அவள் மீண்டும் ஓடிப்போடிகிறாள். இப்படியாக முடிகிறது படம்.

ஒரு புத்திசாலித்தனமான படம் பார்த்த திருப்தி கிடைத்தது. இதிலிருந்து எந்த எந்த காட்சிகள் நம் தமிழ் படங்களில் இடம்பெறப்போகின்றன என்பது தெரியவில்லை. விரைவில் எதிர்பார்க்கலாம். கொரியப் படங்களை அதன் அழகிற்காகவே பார்ப்பேன். இந்த படம் அதையும் தாண்டி என்னை ஈர்த்தது.

Couples 2011 Korean movie  http://www.youtube.com/watch?v=9mfUspqIa8c

Tuesday, 17 July 2012

மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் தனியார் மருத்துவமனைகளும்

மருத்துவ சிகிச்சை பற்றி பேருந்தில் நடந்த சுவாரஸ்யம்

பெசண்ட் நகர் டூ வடபழனி பேருந்து மதியம்

என் பின் சீட்டில் இருந்த ஒருவர் அவரது நண்பரிடம் தான் சமீபத்தில் எடுத்துக் கொண்ட சிகிச்சையை பற்று விளக்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர் குறிப்பிட்ட ஒரு விஷயம் என்னை துணுக்குற செய்தது.

அவர் சென்னையில் ஒரு பிரபல மருத்துவமணை பெயரை சொல்லி - அந்த மருத்துவமனைக்காரங்க நல்லவங்க என்று சொல்லிக்கொண்டிருந்தார். இவர் அங்கு ஏதோ அறுவை சிகிச்சைக்கு சென்றாராம். 55,000ரூ ஆகும் என்றார்களாம். அவரும் அரசாங்கத்தின் கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை எடுக்க சம்மதித்துள்ளார்கள். அப்போது அந்த மருத்துவமனையில் உங்களுக்கு பணம் ஏதாவது வேண்டுமா என்று கேட்டார்களாம். இவரும் ஆம் என்றாரார். அவர்கள் சரி அறுவை சிகிச்சைக்கு 1,00,000 ரூ என பில்லிங் செய்து, அதில் சிகிச்சைக்கு போக மீது 80,000ரூவை இவருக்கு கொடுத்தார்களாம். இவருக்கு ரொம்ப சந்தோஷமாம். 55,000ரூவிற்கு செய்யப்படும் சிகிச்சைக்கு அந்த மருத்துவமனயும் அரசிடமிருந்து 80,000ரூவை கொள்ளை லாபமாக பெற்றுக்கொண்டது இதன் மூலம் வெளிச்சமாகிறது.

இதெல்லாம் எங்கு போய் முடியப் போகிறதோ. இதி அந்த நபர் சொன்னது இன்னமும் விசேஷம். நாம சரியா பேஸி நமக்கு என்ன வேணுங்கிறதை விளக்கி சொன்னா அதுக்கு ஏற்ற மாதிரி செய்து கொடுப்பாங்கன்னு நியாயப் படுத்துகிறார். அவரே இப்போ ஜெ.ஜெ வந்த பின் இந்த தொகை 4,00,000ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருப்பதை சொல்லி அடுத்து ஏதோ சிடிச்சை எடுத்துக் கொள்ளப்போவதாய் கூறினார். தன்னுடன் இருந்த நபரையும் அதற்கு தயார் செய்து கொண்டிருந்தார்.

இங்கே சந்தில் இருக்கும் பத்திரிக்கை நண்பர்கள் இதைப் பற்றி விசாரித்து இப்படி அரசாங்கத்தின் பணம் கொள்ளை போவதை தடுக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்க முடியுங்களா.

Thursday, 14 June 2012

பாண்டிச்சேரியிலிருந்து சரக்கு கடத்துவது எப்படி

நான் குடிப்பதில்லை. அதனாலேயே குடிப்பவர்கள் பற்றியும் குடி பற்றியும் நிறைய விஷயங்களை கவனிக்க முடிந்திருக்கிறது.

இது இன்றைய புதுச்சேரியான பாண்டிச்சேரிக்கு பீர் / சாராயம் குடிக்க வருபவர்களுக்கு சில டிப்ஸ் தரவேண்டி எழுதியது. நான் அதிகம் பயணங்களை விரும்புபவன். சூழ்நிலை காரணமாக அதிக தூரம் பயணிக்க முடியாது. நான் பாண்டிச்சேரியில் இருந்த வரை அடிக்கடி கடலூர் அல்லது விழுப்புரம் பயணிப்பது வழக்கம். இது இல்லாமல் அடிக்கடி பெங்களூரு, சென்னை பயணங்களும் இருக்கும். இப்போது விழுப்புரம் சென்னை மட்டுமே பயனிக்கிறேன். 

சரி விஷயத்துக்கு வருவோம். தமிழகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு வருபவர்களில்(குறிப்பாக ஆண்கள்) 95% பேர் தண்ணியடிப்பதை நோக்கமாக கொண்டே வருவர். அன்றும் சரி இன்றும் சரி வெள்ளி முதல் ஞாயிறு வரை லாட்ஜுகளில் இடம் கிடக்காது மற்றும் விலையும் அதிகம். வருபவர்கள் என்னதான் இங்கு குடித்தாலும் ஊருக்கு போகும் போது ஒரு குவாட்டரையாவது வாங்கி எல்லை தாண்டி எடுத்து போய்விட வேண்டும் என உறுதி கொண்டிருப்பர். இதில் அடிக்கடி கடலூரிலிருந்து வந்து கன்னியக்கோவிலிலும் விழுப்புரத்தில் இருந்து வந்து மதகடிப்பட்டிலும் தண்ணியடிப்பவர்களும் விதிவிலக்கல்ல. மேலும் பாண்டிக்கு போகிறேன் என்றாலே ஏதோ அந்த காலத்தில் சந்தைக்கு போவோரிடம் பட்டியல் கொடுப்பது போல் ஒரு நீண்ட லிஸ்ட் கொடுத்து அனுப்பும் நண்பர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஜெ.ஜெ. டாஸ்மாக்கின் மூலம் எவ்வளவுதான் நல்ல சரக்கு விற்றாலும் அது ஏனோ பாண்டி மற்றும் கோவா சரக்கின் மீது தமிழக குடிமகன்களுக்கு ஒரு தீராத காதல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 

மேலே சொன்ன காரணங்களால் பாண்டிக்கு வந்து இரண்டு நாள் ரூம் போட்டு முக்கி முக்கி, தெளிய தெளிய தண்ணி அடித்தாலும் திரும்ப ஊருக்கு கிளம்பும் போது ஒரு குவாட்டராவது வாங்கி பொட்டியில் பத்திரப் படுத்தி ஊருக்கு எடுத்து போவதை வாடிக்கையாக வைத்திருப்பர் நம் குடிமகன்கள். பேருந்தில் டிக்கெட் வாங்கறாங்களோ இல்லையோ இதை வாங்கி வைத்துக் கொண்டுதான் அவர்களின் ரிடர்ன் ஜர்னியையே துவங்குவார்கள்: நம்மவர்கள். இந்த பாண்டி தமிழக எல்லை பிரச்சனையில் தண்ணி தர மாட்டேன் என கூறும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா வை மாதிரியே பாண்டிக்கும் தமிழகத்துக்கும் ஒரு வாய்க்க தகராறு உண்டு. இது முதல் முறை மாட்டிக் கொள்ளும் வரை அநேக  குடிகாரர்களுக்கு தெரியாது. பாவம். வாங்கி பத்திரமாய் பொட்டியில் வைத்திருக்கும் சரக்கை பாண்டிச்சேரி தமிழக எல்லையில் செக் போஸ்டில் போலீஸ்காரர் சோதனை செய்கையில் எடுத்து காண்பிக்கும் பலரை நான் பார்த்திருக்கிறேன். ஒரே ஒரு பாட்டில்தான் என நிறைய பேர் கெஞ்சுவார்கள். சார் திறந்துதான் எடுத்து வந்தேன் என பலர் சட்டம் பேசுவார்கள். ஆனால் மதிப்பிற்குரிய தமிழக போலீசாருக்கு கடமையே உருவான அவர்களுக்கு இந்த கேஸ் அல்வா சாப்பிடுவது போல். குவார்டருக்கு குவார்டரும் கிடத்துவிடும். சைட் டிஷ்ஷாக கேசும் கிடைத்துவிடும். அந்த பிரயாணியும் தனது பயணத்தை தொடர 500ரூ முதல் 1000 ரூ வரை மொய் எழுதிவிட்டு வந்து அதே பேருந்திலோ அல்லது அடுத்த பேருந்திலோ ஏறி ஊர் பயணத்தை குவாட்டர் போன வருத்ததுடன் தொடர்வார். 

இந்த செக் போஸ்டுகளில் குவார்டர் பாட்டில்களுக்காக நடத்தப்படும் சோதனைகள் எப்படி நடக்கின்றன. எதனடிப்படையில் இவை நடக்கின்றன என தீவிரமாக ஆராய்ச்சி செய்ததில் நமது குடிராஜாக்களுக்கு தேவையான பல ரகசிய தகவல்கள் சிக்கின. முக்கியமானது நீங்கள் குடிக்காமல் ஒரு குவாட்டர் வாக்கி செல்லும் வெளியூர்காரர் என்பது கடைக்காரர் வழியாக போலீஸ் இன்பார்மர்களுக்கு அல்லது நேரடியாக போலீஸ்காரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. எந்த ஊருக்கு போறீங்க என்பது எல்லாம் உங்களின் உளறலின் வாயிலாகவும் ஒரு யூகத்தின் வாயிலாகவும் அறியப்படும். இவர்கள் மூலம் கிடக்கும் தகவலை கொண்டே இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன. அப்படி சோதனை நடக்கிறது என்றால் கண்டிப்பாக ஏதாவது ஒரு செக் போஸ்டில் யாராவது ஒருவர் ஏதாவது தடத்தில் மாட்டியிருப்பார். இதில் சொந்த வாகனத்தில் (கார், வேனில்) வருபவர்கள் திரும்புகையில் பொட்டியாக வாங்கி செல்வர். இதெல்லாம் அல்வா சாப்பிடுவது போல இவர்களுக்கு. மாட்டிக்கொண்டு தண்டம் அழுதுவிட்டு போகும் வாகனங்களை நிறைய பார்க்கலாம். சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் இது நிறைய நடக்கும். வேட்டையும் அதிகமாகவே இருக்கும். இதிலிருந்து தப்ப எளிய வழி ரயில் பயணம். இங்கு இந்த சோதனை நடப்பதில்லை. சொந்த வாகனமென்றால் முக்கிய சாலை வழியாக செல்லாமல், உட்புற சாலைகளை பயன்படுத்தி தமிழக எல்லைக்குள் நுழைவது. இதனை கடலூரிலிருந்து விருந்துக்கு பாட்டில் வாங்க வரும் குடிமகன்கள் திறம்பட பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன். 

நம் குடிமகன்கள் உஷாராக தன்னுடன் வரும் பெண்களின் பைகளில் வைத்து கடத்த ஆரம்பித்தனர். அதை அறிந்த நமது ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இப்போதெல்லாம் அவர்களின் பைகளையும் விடுவதில்லை. பல முறை மாட்டிக்கொள்ளும் பை கேட்பாரற்று கிடக்கும். போலீசாரும் கேட்டுப் பார்த்துவிட்டு கிடைத்தவரை லாபமென பையுடன் இறங்கி சென்ருவிடுவர். 

சமீபத்தில் பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்கையில் நடந்த ஒரு சம்பவம்தான் இந்த பதிவை எழுத மூல காரணம். அந்த நபர் மதகடிப்பட்டில் அவசரமாக ஏறினார். மதகடிப்பட்டு தாண்டியவுடன் செக் போஸ்ட் இருக்கிறது. அங்கே பேருந்தை நிறுத்திவிட்டார்கள். போலீகாரர் ஏறியவுடன் அந்த நபர் அவசரமாக என்னை தாண்டி உள்ளே நுழைய முயற்சித்தார். வயிற்றில் ஏதோ தட்டுப்பட்டது. என்னவென்று பார்த்தால் குவாட்டர் பாட்டிலை பேண்டில் சொருகி இருந்தார். புரிந்துவிட்டது எனக்கு. பாவம் எப்படி தப்பிப்பது என புரியாமல் விழிக்கிறார் என. அடச் சாமி கீழே இறங்கி பேசாமல் நில்லுங்கள். அவர்கள் சோதனை செய்துவிட்டு சென்ற பின் ஏறிக் கொள்ளுங்கள் என அவருக்கு மட்டும் கேட்கும் படி கூறினேன். உள்ளே சென்றால் பேருந்து பின்புறமிருந்து மற்றுமொரு போலீஸ்காரர் தேடிக் கொண்டு வருவார். அவரது தொப்பையில் இவர் உராசினால் கண்டுபிடித்துவிடுவாரென் சொன்னேன். அந்த நபரும் கீழே இறங்கி நின்றார். இரண்டு போலீஸ்காரர்களும் தேடி முடித்து ஏதும் கிடைக்காமல் இறங்கி சென்ற பின் அந்த நபரும் பேருந்தில் ஏற பின்னர் பேருந்து புறப்பட்டு பயனித்தோம். அவரும் ஏதோ அவரது உயிரையே காப்பாற்றியதை போல கண்களாலேயே நன்றி சொல்லிக் கொண்டு வந்தார் இறங்கும் இடம் வரும் வரை. அன்று நான் அறிந்து கொண்ட பாடம் ஒரு பாட்டில் அல்லது இரண்டு பாட்டில் கடத்த ஏதுவான வழி பேண்டுக்குள் சொருகி எடுத்து வருவதுதான்.இது நடந்து 4 வாரம் ஆகிறது. அன்று முடிவு செய்தேன். பாண்டிச்சேரியில் இருந்து சரக்கை தமிழகத்துக்குள் எடுத்து வருவதில் (கடத்துவதில்) உள்ள சிக்கல்களையும் சிக்கல் இல்லாமல் கடத்த இருக்கும் வழிமுறைகளையும் எனது தமிழக குடிமகன்களுக்கு ஒரு பதிவின் மூலம் எடுத்து எழுதுவது என. 

இந்த சோதனைகள் ECR சாலையிலும் திண்டிவனம் சாலையிலும் பேருந்துகளில் குறைவாகவே இருக்கும்.  ஆனால் தனியார் வாகனங்களில் (கார், வேன்) இந்த தடங்களிலும் சோதனைகள் நடக்கிறது என்பதை அறியவும்.

மேலே கூறிய வழிமுறைகளை பயன்படுத்தி பாண்டிச்சேரி வரும் குடிமகன்கள் சரக்கு கடத்தும் போது ஜாக்கிரதையாக் இருக்கும் படியாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது காரைக்காலில் இருந்து சரக்கு கடத்தும் குடிமகன்களுக்கும் பொருந்தும்.

இந்த விவரங்களை கொடுத்தற்காக யாரும் எனக்கு நன்றியெல்லாம் கூற வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, 19 May 2012

Twitter : பாலோ பேக்

என ட்வீட்டர் நண்பர்களுக்கு வணக்கம். இங்கே ட்விட்டரில் நடக்கும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது என்னை அவர் பாலோ பேக் (Follow Back) செய்யவில்லை என்பதே. பலரது மன வருத்தத்துக்குரிய் விஷயமாக மாறி வருகிறது இது.

ட்விட்டர் என்பது எனது நண்பர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு புது விஷயத்தை அல்லது ஆச்சர்யத்தை அல்லது அவசர செய்தியை கூட்டாக தெரிவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சமூக வலைத்தளம். 

நான் இன்று கோவை போகிறேன்.

நான் சென்னை வந்திருக்கிறேன். யாரையாவது பார்க்க முடியுமா.

இங்கே ஏர்போர்ட்டில் நான் இன்று ரஜினியை பார்த்தேன். 

எனக்கு உடனடியாக உதவி தேவை.

இப்படி விஷயங்களை பகிரவே பயன்படுத்தப்பட்டது. விரவில் இது ஒரு instant news channel மாதிரி ஆகிவிட்டது .இதிலிருந்து நிருபர்கள் க்ளூ எடுத்து பின் செய்தி சேகரிக்க ஆரம்பித்தார்கள். இதன் மூலம் பரப்பட்ட செய்திகள் பல மாற்றங்களை ஏற்படுத்த ஆரம்பித்தன. அரசுகள் மாறின. உதாரணம் எகிப்து. நிறுவனங்கள் அடிபனிந்தன. பல நிறுவனங்களில் சேவைகள், பொருட்களின் தரம் இங்கே விமர்சிக்கப்படும் போது அந்த நிறுவனங்கள் அதன் தாக்கம் கண்டு மிரண்டு போயின. அவர்கள் பற்றி செய்திகள் வந்தால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தனி அதிகாரிகளை நியமித்தன. மும்பை குண்டு வெடிப்பு சமயத்தில் அனைத்து தொலைத் தொடர்பு வழிகளும் அடைக்கப்பட ட்விட்டர் நண்பர்களிடையே செய்திகளை பறிமாறிக் கொள்ள பயன் படுத்தப்பட்டது. வாகனங்கள அனைத்தும் பிரதான சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என கூறியிருந்தமையால அங்கங்கே சிக்கிக் கொண்டவர்கள் ட்விட்டர் மூலம் நண்பர்கள், நண்பர்களுக்கு நண்பர்கள் பலரை அடையாளம் கண்டு அன்றைய இரவை கழித்தார்கள். கார்பரேல் நிறுவனங்கள் தங்கள் நிகழ்வுகள்(events) , புதிய பொருள் அறிமுகம் முதலியவற்றை ட்விட்டரில் அறிவித்தன. பிரபலங்களின் ரசிகர்கள் பிரபலங்கள் பற்றி செய்திகளை அறிவிக்கவும் / அறியவும் ட்விட்டரை பயன்படுத்தின.

இப்படி ட்விட்டர் பல விதங்களில் பயன்படுத்தபடுகிறது. இந்த விஷயங்கள் எல்லாம் இதை படிப்பவர்கள்க்கும் தெரிந்திருக்கலாம். இப்போது நாம் விஷயத்திற்கு வருவோம்.

நான் எதற்காக ஒருவரை பாலோ செய்யவேண்டும். அவர் சொல்லும் விஷயங்கள் எனக்கு பயன்படும் அல்லது விருப்பமான ஒன்று என்பதால். அவர் சொல்லும் விஷயங்கள் அல்லது அவரை எனக்கு பிடிக்கும் என்பது. இதையும் மீறி அவர் எனது நண்பர் அல்லது எனக்கு பரிச்சியமானவர் என்பதும் ஒரு காரனம். இதன் மூலம் நான் அவர் போடும் ட்விட்டுகள் மூலம் எனக்கு வேண்டிய விஷயங்களை தெரிந்துகொள்வேன். 

நான் ஒருவரை பாலோ செய்கிறேன் என்பதாலேயே அவரும் என்னை பாலோ பேக் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னுடைய விருப்பங்களை போலவே அவருக்கு என தனி விருப்பங்கள் இருக்கலாம்.அதற்கு தீணி போடக் கூடியவர்களையே அவர் தொடர விரும்புவார். இதுதானே இயற்கையாக நடக்கக் கூடியது. விதிவிலக்காக அவரது நண்பர்கள் தெரிந்தவர்கள் என ஒரு சிலரையும் தொடரலாம்.

நமது தமிழ் ட்விட்டர் கலாச்சாரம் வேறு விதமாக இருக்கிறது. இங்கேயும் புது விஷயங்கள, செய்திகள், தகவல்கள் வந்து சேருகின்றன. அதையும் மீறி இது இணைய நட்பை பெருக்கும் ஒரு தளமாக உருவாகிவிட்டது. இது உலக அளவில் நடந்தாலும் தமிழக ட்விட்டர்களிடையே அதிகமாக இதற்காக மட்டுமே எனவும் பார்க்கப்படுகிறது. இதனால் இங்கு பாலோ பேக் என்பது அதிகமாக எதிர்பார்க்கப் படுகிறது. பாலோயர்ஸ் எண்ணிக்கை பெருமையாக கருதப்படுவதும் இதற்கு காரணம். அதிக பாலோயிங் இருந்தால் பல முக்கிய தகவல்கள் அவர்கள் பார்வைக்கு வருவதில்லை என் நினைப்பவர்கள் பாலோயிங் எண்ணிக்கையை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க நினைப்பதில் எந்த தவறுமில்லை. சந்து என இங்கு அழைக்கப்படும் Timeline படிக்க ஏதுவாக அவர்களுக்குரிய விஷயங்கள் மட்டும் அங்கு வரும்படி பார்த்துக் கொள்வது அவர்களின் சுதந்திரம். இந்த சின்ன விஷயத்தை அடுத்தவரின் பார்வையில் இருந்து புரிந்து கொண்டால் அவர் என்னை பாலோ பேக் செய்யவில்லை எனற பிரச்சனை வராது என் நினைக்கிறேன். இதில் ஈகோவிற்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. 

உங்களின் ட்விட்டுகள் நல்லதாய் இருந்தால் அடுத்தவரின் பார்வைக்கு அதுவாய் போகும். Retweet மற்றும் Favourties என பல வழிகளில் இது நடக்கும். அப்படி அடிக்கடி நடக்கையில் நீங்கள் யாரென்று அடுத்தவர்கள் வந்து பார்ப்பார்கள். பிடித்திருந்தால் அவர்களும் உங்களை பாலோ செய்வார்கள். இப்படித்தான் இது நடக்க வேண்டும். ஆகவே உங்களது ட்வீட்டுகளின் தரத்தை உயர்த்துங்கள். உங்களை முன்னிலை படுத்த நீங்களாகவே மற்ற ட்வீப்புகளுக்கு மென்ஷன் போட்டு ட்வீட்டுங்கள். ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள். நிறைய கவனியுங்கள்.

பழைய ட்வீப்புகள் புதிதாய் வருபவர்களுக்கு எப்படி ட்வீட்ட வேண்டும், என்ன ட்வீட்ட வேண்டும் என்பதை அவ்வப் போது கூறலாம். புதிதாய் வருபவர்களில் திறமை மிக்கவர்களை தயங்காமல் பாலோ பேக் செய்யலாம். அவர்களின் ட்வீட்டுகளுக்கு Retweet மூலம் அங்கீகாரம் வழங்கலாம். சீனியர்ஸ் என்ற முறையில் பின் வருபவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டியது உங்களின் கடமையும்கூட. 

பொதுவில் உங்களை உங்க்ள் பலவீனங்களை வெளிப்படுத்திக் கொள்ளாதீர்க்ள். பச்சாதாபம் தேட முயற்சிக்காதீர்கள்.

மீண்டும் சந்திப்போம் பேக் ஐடி பற்றிய ஒரு பதிவில். 

Happy Tweeting......

Monday, 14 May 2012

TNMegaTweetup – வரவு செலவு கணக்கு


TNMegaTweetup – வரவு செலவு கணக்கு

TNMegaTweetup என்ற இந்த தமிழ் கீச்சர்களின் சந்திப்பு 13/May/2012 மதியம் 3.00 மணி அளவில் சென்னை அடையார் இந்திரா நகர் இளைஞர் விடுதியில் உள்ள Open Air Auditorium இல் நடந்தது. அதன் வரவு செலவு கணக்கு பதிவு இது. 

விழாக் குழுவினர் @expertsathya @balu_sv @karaiyaan 

ஒரு பொது நிகழ்வு நட்த்த வேண்டும் என்றால் பணம் தேவை. மெகா ட்வீட்டப் என முடிவு செய்தபின் இதற்கு எவ்வளவு செலவு ஆகும் அதற்கு பணம் எப்படி வரும் என்ற குழப்பங்கள் இருந்திருக்கும். விழா வெற்றிகரமாக முடிந்துவிட்ட்து. இதற்குரிய செலவுகளுக்கான பணம் எப்படி வந்தது அதை அப்படி செலவு செய்தோம் என்பதற்கான வரவு செலவு விவரம் கீழே. 

வரவு கணக்கு:

இதில் 1000 ரூபாய்க்கும் மேலே கொடுத்தவர்களின் பெயர்களை தனியாக கீழே.



Sl. No
Twitter Handle
Amount(Rs)
1
@ravan181
10000.00
2
@Anandraaj04
5000.00
3
@venkat1India
2500.00
4
@amas32
2500.00
5
@thiru_navu
1000.00

Total
21000.00


இரவு விருந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததால் விழாவிற்கு வருபவர்கள் அவர்கள் விருப்பட்டால் 200 ரூபாய் வழங்கலாம் என அறிவித்திருந்தோம். அந்த வகையில் விழா அரங்கில் வந்த வசூல்



Collection - Rs. 11,600.00

மொத்த வரவு 
Sl. No
Details
Amount(Rs.)
1
Sponsors
21,000.00
2
Collection
11,600.00

Total
32,600.00


செலவு கணக்கு: 

Sl. No
Details
Amount(Rs.)
1
Catering – 125 Nos at the rate of Rs.160 / head, Service Tips
20,500.00
2
Hall Charges with Electricity, Chairs and Cleaning
8,000.00
3
Projector and Speakers Rent
2,000.00
4
Water
125.00
5
Gift for Mother’s day
500.00
6
Table Rent
250.00

Total
31,375.00


வரவு செலவு கணக்கு

Particulars
Amount (Rs.)
Income
32,600.00
Expenses
31,375.00
Balance In Hand
1,225.00


மற்ற விவரங்கள்:

@ravan181 மற்றும் @Anandraaj04 அவர்கள் இருவரும் @senthilchn  என்னிடம் அவர்களின் பங்களிப்பை அளித்தார்கள். 

@amas32 அரங்கில் அவரது பங்களிப்பை @expertsathaya விடம் அளித்தார்.

@venkat1India மற்றும் @thiru_navu ஆகியோர், எல்லோரும் பணம் செலுத்திய இடத்திலேயே அவர்களின் பங்களிப்பை செலுத்தியிருக்கிறார்கள். 

அரங்கில் வசூல் செய்தவர் @k7classic. இறுதி வசூல் கணக்கை பார்த்தது @senthilchn மற்றும் @k7classic

வரவு செலவு கணக்கு எழுதி சரி பார்த்தது @ravan181 @senthilchn @expertsathaya 


கொசுறு:

என்னதான் வரவு செலவு பதிவு என்றாலும், ட்வீட்டர் பற்றியது என்பதால். இப்படியே முடிக்க மனமில்லை. ஆகவே இந்த கொசுறு.

@ravan181 தனக்கு வேற செலவுகள் இருப்பதால் 10,000 ரூ தான் தற்போது தன்னால் முடியும் என சொல்லி என்னையும் @sesenthilkumar ஐயும் திக்குமுக்காட வைத்து வேடிக்கை பார்த்தார். கலெக்‌ஷனே ஆகாமல் போனாலும் சாப்பாட்டுக்கு சொன்ன காசை கொடுக்க வேண்டி மேலும் ரூ. 15,000.00 அரங்கிற்கு வந்தவுடன் என்னிடம் கொடுத்து என்னை பாவக்காரனாக பார்த்தார் இவர். நல்ல வேளை நம் மக்கள் மானம் காத்தனர். 

@Anandraaj04 தான் வரமுடியாது என்பது தெரிந்திருந்தும் என்னை துரத்தி கட்டாயப்படுத்தி 5000 ரூ வை என் கணக்கில் சேர்பித்துவிட்டுதான் ஓய்ந்தார். முட்டை பப்ஸ் எல்லோருக்கும் விநியோகம் செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம். இதற்காக மும்பையில் இருந்து அடையாரில் இருக்கும் பேக்கரிகு போன் செய்து விசாரித்தும் வைத்திருந்தார். ஸ்நேக்ஸ் வேறு ஏற்பாடு செய்திருந்ததால் அவரது விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை.

@venkat1India தன் பெயர் வெளியே தெரியவேண்டாம் என கூறியிருந்தார். நான் அவரது twitter handle மட்டுமே பயன் படுத்தி இருக்கிறேன். :) 

நமது சக கீச்சர் என்ன நிலையில் இருந்தார் 14/05/2012 காலை எனக்கு போன் செய்து, தல நான் பதிவிவேட்டில் ரூ.200 எழுதிவிட்டேன் ஆனால் பணம் கொடுக்க மறந்துவிட்டேன். நீங்கள்தான் கணக்கு பார்க்கிறீர்களாமே எங்கே வந்து கொடுக்கட்டும் என்றார். @k7classic விவரம் கேட்க போன் செய்தால் அமாங்க என்ன செய்ய குறைந்தது நான் போட்டுட்டேன் என்கிறார். அதிகமா குறைந்திருந்தா என்ன செய்திருப்பீர்கள் என்றால் அப்போதும் இதுவே என்றாரே பார்க்கலாம். என்ன மனிதர்கள் இவர்கள் எல்லாம். எனக்கு இன்னமும் வியப்பு அடங்கவில்லை. 

@amas32 மேடம் யாரிடம் பணத்தை கொடுப்பது என விழித்து கொண்டிருந்தார். போ கேட்டு வாங்கி வந்துவிட்டோமில்லையா. கிட்டத்தட்ட வழிப்பறி போலத்தான் ( சும்மா சொன்னேன் நண்பரே) 

@jesuthangadurai அனைவருக்கும் நினைவுப் பரிசாக TNMegatweetup மற்றும் அவரது handle பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு அழகான் பேனாவை அவரது செலவில் வாங்கி வந்து வழங்கினார். 200 பேனாக்கல் எடுத்து வந்தார். மீதம் எடுத்து போக நேர்ந்தது.

@iParisal தந்து பிறந்தநாளை முன்னிட்டு அவரது செலவில் அனைவருக்கும் லட்டு, ஓல பகோடா மற்றும் மிரண்டா/கோக் வழங்கினார். 

ஒரு வருத்தம் : 125 சாப்பாடு சொல்லியிருந்தோம். பத்தாமல் போயிடுமோ என்ற பதட்டத்தில் இருந்தோம். வந்தவர்கள் 118 என் பதிவு காண்பிக்கிறது. ஆனால் 70-75 பேர்தான் உணவு உண்டனர். இது சற்று ஏமாற்றம் அளித்தது. ஏழை நாடான இந்தியாவில் உணவை வீணாக்குவது என்பது பாவமான செயல் போல தெரிந்ததால் இந்த வருத்தம். யாரையும் புண்படுத்த அல்ல. 



மீதம் இருக்கிற ரூ. 1,225.00 ஐ என்ன செய்யலாம் என கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. 


இந்த நிகழ்வு ஒரு வருடாந்திர தொடர் நிகழ்வாக அமைய எல்லோரும் விரும்புகிறோம். தொடர்ந்து வரும் நிகழ்வுகள் இன்னமும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிகழும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் பிரிந்தோம் மீண்டும் சந்திக்க.

வாழ்க தமிழ்... வளர்க நேசம்...