புதிதாய் ஒரு ப்ளாக்.
என்ன எழுதப் போகின்றேன் இதில். தினமும் என்னை சுற்றி பல விஷயங்கள் நடக்கின்றன. நான் பார்க்கும் மனிதர்கள், நிகழ்வுகள், கேள்விப்படும் சம்பவங்கள், படிப்பவை என பல சுவரஸ்யமான விஷயங்கள் என்னை சுற்றி நடக்கின்றன. அவற்றை இங்கே பதிவு செய்ய முனைகின்றேன்.
எனது எழுத்து திறமையை வளைத்துக்கொள்ள, சீரமைக்க முடியுமா என பார்க்கிறேன்.ஒவ்வொரு வருடமும் டைரி எழுத ஆரம்பித்து சனவரி மாதத்தை தாண்டி எதையும் எழுதியதில்லை. என் அம்மாவிற்கு அடுத்த வருடத்தில் வீட்டுச் செலவு கணக்கு எழுதத்தான் என் டைரிகள் பயன்பட்டன. இதுவும் அதுபோல முடியாமல் தொடர வேண்டும் என் விரும்புகிறேன். பார்ப்போம் இது எதுவரை செல்கிறது என்று.
இதை சிறு காலம் என்னால் சரிவர எழுத முடிந்தால் முக்கியமாக மற்றவர்களுக்கு சலிப்பு தட்டாமல் இருக்குமானால் எழுத முடிவு செய்திருக்கும் மற்ற விஷயங்கலை தொடரலாம்.
வாழ்த்துகள் .. நிறைய எதிர்பார்கிறேன் :)
ReplyDeleteதினமும் ஏதாச்சும் பகிரலாமே.. உங்களைச் சுற்றித் தான் அவ்வளவு நடக்கின்றதே..அல்லது.. நடக்கும் இடமெங்கும் நீங்கள் வாண்டடா இருக்கின்றீர்களே.. :))
ReplyDeleteவரவேற்கிறோம் தோழர்!