அது உறவாக இருந்தாலும் நட்பாக இருந்தாலும் ஒரு சிலர் காரண்மே இல்லாமல் மனதுக்கு நெருங்கியவர் ஆகிவிடுகின்றனர். அப்படி நெருங்கியவர்களின் செயல்கள், வருத்தங்கள், கோவங்கள், வார்த்தைகள் என் எல்லாமே நம்மிலும் நமது செயலிலும் ஒரு தாக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்துகின்றன.
இப்படி ஒரு நட்பு திரு.முத்துபிரகாஷுடன் ஏற்பட்டது.மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் கொடுத்த நட்பு அது. சில காரணங்களால் பிரிந்தோம்.
அவர் மீண்டும் நேற்று என்னை தொடர்பு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. அவருடைய அலைபேசி அவரது மனம் வரம் கொடுத்தால் மட்டுமே உயிர்பெற்று நம்மை அழைக்கும். அலைபேசியில் இல்லாவிட்டாலும்கூட gmail chat இல் அவருடன் நேற்று இந்த 3 மாதகால ஏக்கம் தீர பேசியதில் மிக்க மகிழ்ச்சி. இது தொடரும் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கைதான் என்னை தினமும் நகர்த்தி செல்கின்றது.
"இன்று எத்தனை பேரின் இதழ்களில் புன்னகை பூக்க நான் காரணமாய் இருந்தேன்... இந்த நினைப்புதான் என்னை மனிதனாக வைத்திருக்கிறது"
ReplyDeleteஇவ்வாறு கீச்சுவது எளிது.. நான் கூட இதற்கிணையாய் வார்த்தைகளைக் கோர்க்கக் கூடும்.. ஆனால்...!?
எனதன்புகள் தோழர்!