வழக்கம் போல அன்று காலை எழுந்து குளித்துவிட்டு, என் மகளை குளிப்பாட்டிவிட்டு அவளுக்கு சட்டை போட்டுவிட்டு நான் கிளம்ப அறைக்கு சென்றிவிட்டேன். என் மகளும் சாமி கும்பிட ஆரம்பித்தாள். நான் சிறு வயது முதல் கடைபிடித்து வந்த ஒரு பழக்கமான சாமி கும்பிடுவதாய் சொல்லி தினமும் காலையில் சாமியிடம் பேசுவதை அவளுக்கும் சொல்லிக் கொடுத்திருந்தேன். பேசுகிறேன் என்று சொல்லி என் கோரிக்கைகள், வீட்டில் அம்மாவில் ஆரம்பித்து அனைவரும் நல்லா இருக்க வேண்டும், பரீட்சையில் நல்ல மதிப்பெண் வாங்கவேண்டும், வேலை கிடைக்க வேண்டும் போன்ற வேண்டுதல்களை சாமியிடன் வைப்பது என் வழக்கம். அவளும் அதை மிகுந்த சிரத்தையுடன் தினமும் செய்வதில் எனக்கு மகிழ்ச்சி. நான் செய்வது போலவே அவளது சின்ன சின்ன கோரிக்கைகளையும் சாமியிடம் சொல்லுவாள். அதில் எங்களால் முடிந்ததை நானும் என் மனைவியும் நிறைவேற்றிவந்தோம். இன்றும் அவள் சாமியிடம் என்ன பேசுகிறாள் என்று காது கொடுத்துக் கொண்டே நான் அலுவலகம் கிளம்ப ஆரம்பித்தேன்.
சாமி சாமி அம்மா, அப்பா, தாத்தா, ஆயா, அத்தை, ஹரிஷ், மாமா, பெரிய ஆயா, ரோஸி மிஸ், தேஜு, தெருவில் இருக்கும் குட்டி நாய், பெரிய டெட்டி பியர் எல்லாம் நல்லா இருக்கனும். அப்புறம் சாமி அம்மாவும் அப்பாவும் இப்போவெல்லாம் அடிக்கடி சண்டை போட்டுக்கறாங்க. அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காம பர்த்துக்கோ சாமி. அப்பாவுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். நேத்து அம்மா என்னை திட்டனாங்கன்னு அப்பா அம்மாவை அடிச்சுட்டார். பாவம் சாமி அம்மா. அவங்க மட்டும் என்ன செய்வாங்க. நான் கண் பார்வை இல்லாததை மறந்து சுவற்றில் மோதிக்கொண்ட்துக்கு அவங்க என்ன செய்வாங்க. ஏதாவது கோவத்தில் என்னை ஏதாவது சொல்லிவிட்டால் அப்பாவிற்கு ரொம்பவே கோவம் வந்துவிடும். அடிக்கடி என்னை வைத்துதான் இரண்டு பேரும் சண்டை போட்டுக்கறாங்க சாமி. கோவத்தில் அம்மா உன்னாலதாண்டி நான் திட்டுவாங்கறேன் என் சொல்லும்போதெல்லாம் எனக்கு அழுகையா வருது சாமி. சாமி நான் உன்கிட்ட வந்திடறேன். நீதான் என்னை படைச்சியாமே, அப்பா சொல்லியிருக்கார். அப்போ உனக்கு என்னை பிடிக்கும் இல்லையா. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் விளையாட என்னை மாதிரி குறையெல்லாம் இல்லாம ஒரு அழகான குட்டி தம்பி பாப்பா கொடுத்துடு சாமி. நான் உன்கிட்டையே வந்திடறேன்.
இப்படி அவள் சாமிகிட்ட பேசிகிட்டிருக்கும் போது நான் துணுக்குற்றேன். என் மனைவிக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அடுப்படியில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அவசரமாய் வந்து அறையில் என்னை எட்டிப் பார்த்தாள். அவள் பார்வையில் இருந்த அந்த குழப்பமும் இயலாமையும் என்னை ஏதோ செய்தது. ஏதாவது கேட்டால் அழுதே விடுவாள் போல். மெல்ல அவளை அணைத்து முத்தமிட்டு சாமி அறைக்கு சென்று என் மகளை அனைத்துக்கொண்டேன்.
என் ஸ்பரிசம் பட்டவுடன் என் பக்கம் திரும்பி, அப்பா நான் சாமிகிட்ட சொல்லியிருக்கேன் என்னை அவர்கிட்ட கூட்டிகிட்டு ஒரு அழகான தம்பி பாப்பாவை உனக்கும் அம்மாவுக்கும் கொடுக்க சொல்லியிருக்கேன்.
முதல் கதையே முத்தாய்ப்பாய் அமைந்துள்ளது, நறுக்கு தெரித்தாற் போல கதைக்களம், சுருங்க சொன்னாலும் சுருக்கென தைக்கும் சிறுகதை- வாழ்த்துக்கள் ...
ReplyDelete@நிலா தமிழன்,
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி... :)
உண்மையிலேயெ மனசை உலுக்கி விட்டத்து கதையின் போக்கு .. சின்னப்பெண்னின் ஆதங்கம் என்னை கண்ணீர் ததும்ப வைத்துவிட்டது.. இதை கதை என்று சொல்லமாட்டேன், எங்கோ ஒரு வீட்டில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வே.. மிகவும் தரமாக இருக்கிறது வாழ்த்துக்க்கள் ..
ReplyDelete@மன்மதகுஞ்சு,
Deleteமிக்க மகிழ்ச்சி தல... கண்டிப்பாக நிறைய வீட்டில் நடக்கும் நிகழ்வுதான்... கண்பார்வையற்ற பிள்ளை என்பது அழுத்தத்தை அதிகப் படுத்த எற்படுத்திய ஒரு கற்பனை... அது இல்லாமலேயேகூட இவ்வாறு ஏக்கங்கள் இருக்கின்றன...
சூப்பர் தல...ரியலி சூப்பர்..!
ReplyDelete@Rajesh,
Deleteமிக்க மகிழ்ச்சி :)
நெகிழவைத்துவிட்டது..அருமை ! வாழ்த்துகள்!
ReplyDelete@Rajarajacholan,
Deleteமிக்க மகிழ்ச்சி :)
nalla speed'ah padichuttu irunthan // நான் கண் பார்வை இல்லாததை மறந்து // intha line vanthathum oru nimidam amaithu aanaeen en kannil neer kasinthathu !! vaalthukal arumaiyaga irunthathu :)
ReplyDelete@Rajkumar,
Deleteகண் பார்வை இல்லாத குழந்தை என்பது ஒரு தாக்கம் ஏற்படவே எழுதியது... அது இல்லாமலேயே குழந்தைகள் இப்படித்தான் உணர்கிறார்கள்... நாம் அவர்களை உதாசீனப்படுத்துவதாய்... ஏனோ அவர்கள் வாழ்வுதான் முக்கியம் ஓடும் நாம் அவர்களின் சந்தோஷங்களை உதாசீனப்படுத்திவிடுகிறோம்..
Hmm.. Yes Boss.. idu pool Siru kadaigal'aga niraiya eluthungal ennai pool palaruku siru kadaigal romba pidikum.. Nathan simply your way of writing is Short and sweet :D
Deleteஅருமை நண்பரே வாழ்த்துகள்!
ReplyDelete@Rani,
Deleteமனிழ்ச்சி :)
no comments - tears in my eyes @sweetsudha1
ReplyDelete@Sudha,
Deleteசோகம்தான்...
ஒரு பக்க கதையாக குமுததிலோ, விகடனிலோ வர வேண்டிய கதை இது. உங்கள் ப்லாக் என் விகடனில் வரும் நாள் வெகுதொலைவில் இல்லை தல. வாழ்த்துக்கள்..!
ReplyDelete@Mani,
Deleteவாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே... :)
கண்ணீர் கசிவுகளுடன் படித்து முடித்திருக்கிறேன்.. வாழ்த்துக்கள் தல!.. :)
ReplyDelete@மோகன் குமார்,
Deleteவாழ்த்துக்கு மகிழ்ச்சி
வாழ்த்துகள் தல.....
ReplyDeleteஅருமையான கதை......
இப்படிக்கு - @kutty_twits
@சாகசன்,
Deleteமகிழ்ச்சி... :)
நல்லாத் தானே இருந்தீங்க.. ஏனிப்படி????
ReplyDeleteஅஞ்சலி படம் பார்த்த பீலிங் வருது.. சகிக்கல.
நெடுங்கதையின் சிறு பகுதியாக இச்சம்பவம் வந்தால் வேறு விடயம்... ஆனா இது.. உவ்வ்வே..